திருப்பூரில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது!!
திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் போன்ற பணிகளை உதவி நிர்வாக பொறியாளர் தலைமையில் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததார் முருகன். மாநகராட்சி பகுதிகளில் செய்த பணிகளுக்கு பில் தொகை விடுவிக்ககோரி 3-வது மண்டல பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனிடம் விண்ணப்பித்தார். அதற்கு இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் ரூ.8.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், முதல் கட்டமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஒப்பந்ததார் முருகன், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனு க்கு பாடம் புகட்ட நினைத்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை ஒப்பந்ததார் முருகன் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை, கையும் களவுமாக பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!! தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது!!
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தை பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன என்று பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படுவதற்கு முன்பாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடர்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் தமிழில் இடம்பெற்ற வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இருந்தன.
தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும், ஆலந்தூர் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இடம்பெற்றிருந்தன. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவிலேயே எழுத்துப் பிழையுடன் தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றது விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன. பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது.

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா? பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!!
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற திருவிழாவில் சிறுமிக்கும், பூபதி என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களின் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதையடுத்து பூபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து சிறுமியிடம் 10 நாட்களுக்கு தொடர்ந்து அலைபேயில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிறுமி பள்ளிக்கு சென்றபோது, சிறுமியை பூபதி விராலிமலை நாகமங்கலம் அருகே முள்காட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பள்ளிக்கு வராத சிறுமி குறித்து பள்ளியிலிருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் பதறியடித்து தேடி கொண்டிருந்தனர். அப்போது மாலை வீட்டிற்கு வந்த சிறுமியிடம் கேட்டபோது பூபதி தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பூபதியை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
விருத்தாசலத்தில் ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட காவலர் கைது!!
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போதை காவலர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் ரஞ்சித் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இரவு காவலர் ரஞ்சித் மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி சுபாஷ் ஆகிய 2 பேரும் மதுகுடித்து விட்டு பைக்கில் சென்றுள்ளனர்.
அண்ணா நகர் வாட்டர் டேங்க் அருகே அவர்கள் வந்தபோது, விருத்தாசலம் துர்க்கை நகரை சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களான 18 வயதான 2 சிறுவர்கள் வந்த பைக்கை வழிமறித்து, கஞ்சா பயன்படுத்துகிறீர்களா? என கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது தினேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவர்களை ரஞ்சித்தும், சுபாசும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கியதோடு சிறுவன் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.

இதில் காயமடைந்த தினேஷ்குமார், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், காவலர் ரஞ்சித் மற்றும் ரவுடி சுபாஷ் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி!! வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா.!?
தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள “தமிழ்நாடு அரசு” என்ற வார்த்தையே எழுத்துப் பிழையுடன் இருந்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சியிலேயே அரங்கேறியுள்ள ஒரு சொதப்பல், தற்போது மாநிலம் தழுவிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ தொடக்க விழா நடைபெற்றது.

அந்த விழாவில் அரசுத் தரப்பில் ஒளிபரப்பப்பட்ட பிரத்யேக ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த அடுத்தடுத்த எழுத்துப் பிழைகள் மற்றும் தமிழ் வார்த்தை தவறுகள் தவெக அரசுக்குத் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. ரூ.354 கோடி ஒதுக்கீட்டில், 2,500 புதிய பணியிடங்களுடன் தொடங்கப்பட்ட இந்த மெகா திட்டத்தின் தொடக்க விழாவில், ஒரு ஏஐ வீடியோ தயார் செய்யப்பட்டு எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளில் இருந்த வார்த்தைகளில் பல இடங்களில் எழுத்துப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும் உள்ளிட்ட வார்த்தைகளிலேயே எழுத்துப் பிழை இருந்தது. அதேபோல் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என்ற வார்த்தையிலும் எழுத்துப் பிழை இருந்தது. இன்னும் சொல்லப் போனால், அது தமிழ் எழுத்து தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தவெக அரசின் முதல் அரசு விழாவிலேயே, அதுவும் முதலமைச்சர் கலந்துகொண்ட மேடையிலேயே இத்தனை தமிழ்ப் பிழைகளுடன் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எப்படி என்று எதிர்க்கட்சிகள் உடனே போர்க்கொடி தூக்கியுள்ளன.
விசாகப்பட்டினத்தில் வெடித்து சிதறிய இரும்பு குழம்பு!! 8 தொழிலாளர்கள் மரணம்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் நேற்று உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கொள்கலன் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் உள்ள SMS-2 மற்றும் STC-3 ஆகிய பிரிவுகளில் நேற்று திங்கள்கிழமை பணிகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது மிக அதிக வெப்பநிலையில் உருகிய நிலையில் இருந்த இரும்பை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய கொள்கலன் எதிர்பாராத விதமாக வெடித்தது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பெரிய கொள்கலனில் இருந்த உருகிய இரும்பு குழம்பு ஆலைக்குள் பெருமளவில் கசிந்தது. மிக அதிக வெப்பத்தில் இருந்த இரும்பு குழம்பு தொழிலாளர்கள் மீது பட்டதால், அங்குப் பெரும் பதற்றம் உருவானது. தொழிலாளர்கள் தங்களைக் காத்துக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இருப்பினும், அதையும் தாண்டி அந்த இரும்பு குழம்பில் சிக்கி சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் ஆலையின் நிரந்தர ஊழியர்கள், 3 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். உயிரிழந்த நிரந்தர ஊழியர்கள் தொழில்நுட்ப வல்லுநர் கோந்தினா பானு குமார், மேலாளர்கள் கே. பிரபாகர், கோல்ட் குமார் மற்றும் ஜி.வி. அப்பாராவ், எம். கிருஷ்ணா நாகு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோல இந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரமணா, திரினாத், என். அப்பல ராஜு ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த உடனேயே ஆலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் கையெழுத்து..!! நள்ளிரவில் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை!!
தவெக அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதா ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிஸை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வலதுசாரி ஆதரவாளராக யூடியூப்பில் பிரபலமானவர் மாரிதாஸ். இவர் தனது சேனல்களில் தொடர்ச்சியாக ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்த போதே, ஆளும் தரப்புக்கு எதிராக வீடியோ வெளியிட்டவர் மாரிதாஸ்.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்து மாரிதாஸ் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தவெக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை வீடியோ வெளியிட்டு வந்தார். இதற்கிடையே சமீபத்தில் இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு இன்று காலை அதிரடியாக சைபர் கிரைம் காவல்துறையினர் விரைந்தனர். தனது வீட்டிற்கு காவல்துறையினர் வந்துள்ளதை மாரிதாஸே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். ஜனநாயகம் மற்றும் கருத்துரிமை நசுக்கப்படுவதாகச் சாடினார்.
இதற்கிடையே மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சூழலில் தான் இரவு நேரத்தில் மாரிதாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தப் போது, விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கினார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸ் ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
ராப் பாடகர் வேடனுக்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலை உதயநிதி ஸ்டாலின்!!
2024-ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி கருத்துகளையும் தன் பாடல் வரி எனும் பாடல் கேரளத்தைத் தாண்டி உலகெங்கும் வைரலானது. இந்தப் பாடல் வரிகளை எழுதி பாடிவர் வேடன்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி. ஈழத் தாய்க்கும் கேரளத் தந்தைக்கும் பிறந்த இவர், திருச்சூரில் ‘ஸ்வர்ணபூமி’ எனும் பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக வாழும் பகுதியில் வளர்ந்தார். ராப் இசைக் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கும்போது ‘வேடன்’ எனும் புனைப்பெயரை சூட்டிக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பாடகர் வேடன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் ராப் பாடகர் வேடன் அவர்களுக்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
சைக்கோ போல் அடிக்கடி டார்ச்சர்..!! வைரலாகும் மனைவியின் கண்ணீர் வீடியோ..!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தர்மராஜா. இவரது மனைவி பி.ஏ பட்டதாரியான அட்சயா இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். அட்சயா திருச்சி, கோயம்புத்தூரில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். தவெக தலைவர் விஜயின் தீவிர ரசிகை. சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்
இந்நிலையில் திருச்சியில் பணி புரிந்த போது அட்சயாவுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி மயில்பாளையம் வந்து அட்சயாவை சந்திப்பார். இது தெரிந்ததால், ராஜா மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3-ந் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி அட்சயா தனியாக இருக்கும் போது அவரது கணவர் கையும் களவுமாக பிடித்து மனைவியை தட்டி கேட்கிறார்.
மேலும் வீட்டில் உள்ள அவனை வெளியே வரச்சொல்லுமாறு கூறினார். அந்த நபர் வெளியே வந்ததும் அவரை தாக்கினார். பின் அந்த நபர், வீட்டை விட்டு ஓடுகிறார். இப்படி அந்த வீடியோ முடிகிறது. இதனிடையே தர்மராஜா அழுது கொண்டே பேசும் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், ‘‘தமிழக காவல்துறைக்கு வணக்கம். இன்று என் குடும்பமே அழிந்து போய் விட்டது. என் குழந்தையும் என்னுடன் சேர்ந்து சாகப்போகிறான். என் மனைவியை கத்தியால் கிழித்து போட்டு விட்டு வந்து விட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவர் தான். அவனால் எல்லாமே போய் விட்டது என்று வீடியோவில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மயில்பாளையத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் தர்மராஜா-அட்சயா தம்பதியிடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்ட தர்மராஜா கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதட்டில் சரமாரியாக குத்தினார்.
பின்னர் அட்சயாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு மகனை தூக்கி கொண்டு தப்பியது தெரியவந்தது. படுகாயமடைந்த அட்சயா, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் வல்லத்தில் மகனுடன் தர்மராஜா இருப்பது தெரியவந்தது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் நேற்று வல்லத்துக்கு சென்று அங்கு மகனுடன் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து பட்டுக்கோட்டை காவல்துறையில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அட்சயா நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், தற்போது சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ எதுவுமே இப்போ எடுத்தது கிடையாது. 2025 ஏப்ரல் மாதம் எடுத்த வீடியோ. இதை தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட கூடாது என காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது பேக் வீடியோ. எனது கணவர் கஞ்சா போதையில், நான் தங்கி இருந்த விடுதியில் வந்து என்னிடம் தகராறு செய்தார். அதில் நிறைய பேர் தங்கி இருக்கிறோம்.
நான் தங்கி இருக்கும் பக்கத்து அறையில் வேறு பெண்களெல்லாம் தங்கி இருந்தார்கள். அவர்களை எல்லாம் அவர் கவர் பண்ணி வீடியோ எடுக்கவில்லை. என்னை மட்டும் கார்னர் பண்ணி வீடியோ எடுத்தார். நான் வேலைக்கு போகக்கூடாது என்பதற்காக பலமுறை டார்ச்சர் செய்து எனக்கு மொட்டை அடித்துவிட்டார். நான் ஸ்லீவ்லெஸ் டிரஸ் போட்டிருந்தேன் தான்.
ஹாஸ்டலில் இரவு நேரங்களில் நாங்கள் ஸ்லீவ்லஸ் டிரஸ் தான் போட்டு இருப்போம். கஞ்சா அடித்துக்கொண்டு என்னை தாக்குவார். அதனால்தான் நான் ஒரு வருஷமாக அவரை பிரிந்து இருக்கிறேன். அவர் சிகரட்டில் எல்லாம் சூடு வைத்திருக்கிறார். இப்ப கூட நான் வாழ வருகிறேன் என சொல்லிக் கொண்டுதான் வந்தார். என் பிள்ளையையும் போட்டு டார்ச்சர் செய்வார் என அட்சயா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆர்.பி. உதயகுமார்: நாங்க தோத்து தான் போயிட்டோம்…!! செத்து போகல…!!
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளை சந்தித்தீர்களா விவசாயிகளை சந்திக்க கூட இன்னும் அவருக்கு நேரமில்லை மனமும் இல்லை. இதுல அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று டயலாக் விட்டார். நாங்க தோத்து தான் போயிட்டோம் தவிர செத்துப் போகல.. தம்பிகளா புரிந்து கொள்ளுங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது,” தலைமை மீது மனதாங்கல் ஏற்பட்டு சிலர் எதிரியிடம் சரணாகதி அடைந்து வருகிறார்கள். இது போன்று நாவலர் நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் தலைமை மீது மனத்தாங்கல் ஏற்பட்டு மீண்டும் தாய்கழகத்தில் இணைந்த வரலாறு உண்டு.
இது எல்லாம் பார்த்து சலித்து போன வரலாறு. தாய் அருமை தெரியாமல் சிலர் அன்பும் அரவணைப்பும் எங்கே கிடைக்கும் என்று தேடி ஓடும் காட்சிகளை பார்க்கக் கூடிய சூழலை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. மனத்தாங்கல் ஏற்பட்டு சென்றவர்கள் மீண்டும் தாய்கழகத்தில் இணைந்த வரலாறு உண்டு. அதுபோல முன்னாள் அமைச்சர்கள் கருத்து வேறுபாட்டால் சென்றுள்ளனர். அவர்களுக்கு தெளிவு கிடைக்கும் போது அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு வருவார்கள்.
நம்மை பார்த்து சில சிரிப்பா சிரிக்கிறாங்க.. நாங்க தோத்து தான் போயிட்டோம் தவிர செத்துப் போகல.. தம்பிகளா புரிந்து கொள்ளுங்கள்.. வாழ்க்கையில் நாங்கள் எத்தனையோ இழந்து உள்ளோம். எத்தனை விஜய் வந்தாலும் நாங்கள் பார்ப்போம். அதிமுக பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தான் வென்றுள்ளது. கோடான கோடி தொண்டர்கள் ஆணிவேராக இருந்து இந்த இயக்கத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய காட்சிகளை சார்ந்த சில்லரை பசங்கள் சிரிப்பா சிரிக்கிறார்கள் .அது வேதனையாக உள்ளது.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னாள் கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா குருவி லெட்டர் பேடு கட்சி கூட உங்களை நம்பி வரவில்லை. விஜய் தம்பி மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. அதனால் இன்றைக்கு அதிகாரத்தை தேடி வருகிறார்கள். உங்களுக்கு ஏதாவது ஒன்று ஆனால் அதற்கு அதிமுக பொறுப்பு அல்ல. விஜய் தம்பி உயிர் ஒரு முறை தான் போகும். உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். அன்போடு சொல்கிறேன். அம்புட்டுதான்.. நான் சொல்ல வர்றது வாழ்க்கை என்பது ஒரு வட்டம். மேல இருக்கிறது கீழே வருவதும் கீழே இருப்பது மேலே வருவதும் இந்த நாட்டில் இயற்கை நீதி.
விஜய் ஆணவத்துடன் பேசுகிறார். இதே 41 பேர் இறந்தபோது ஓடி ஒளிந்து விட்டார். அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று டயலாக் விட்டார். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளை சந்தித்தீர்களா விவசாயிகளை சந்திக்க கூட இன்னும் அவருக்கு நேரமில்லை மனமும் இல்லை. மேகதாது விஷயத்தில் அடுத்த கட்ட நகர்வு மர்மமாக உள்ளது.. மற்றும் பலர் என்று கூறிய விஜய் 25 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஏன் சால்வை போட்டார் தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவா?
இந்த கணக்கு புரியாமல் விஜய் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு ஆள் பிடிக்கும் வேலையை செய்கிறார். ஆதவ் அர்ஜுனா என்ற பைத்தியக்கார அமைச்சர் பேசுகிறார். 50 சதவீத அதிமுகவினரை பிடித்து விட்டதாக கூறுகிறார் அப்படி ஒன்னும் நடக்கவில்லை.அதேபோல த.வே.க.ஆட்சிக்கு வரவேண்டும் என்று அதிமுகவினர் ஓட்டு போட்டனர் என்று கூறுகிறார். இப்படி இருந்தால் விஜய் ஆட்சிக்கு வர முடியாது. அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்பது தெரியவில்லை. இது போன்ற அரவேக்காடு கிறுக்கு அமைச்சர்களை எல்லாம் அமைச்சரவையில் உட்கார வைத்து நாம் பார்க்க வேண்டும் என்பது தலைவிதி” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.