தனது கணவர், தனது குழந்தைகளின் கவுரவத்தை கருத்தில் கொண்டு வழக்கை தனி அறையில் வைத்து விசாரிக்குமாறும் இந்த விவகாரத்தை ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், யூடியூப் சேனல்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் கேட்டிருக்கும் பட்சத்தில் விஜய்-யின் விவாகரத்து மனுவை லீக் செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
100 கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் தொடங்கிய முதலே, சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக இயங்கி வருகிறது. பூவே உனக்காக படத்தை பார்த்துவிட்டு லண்டனில் இருந்து விஜய்யை பார்க்க நேரில் வந்த ரசிகை சங்கீதா. பூவே உனக்காக படத்திற்கு முன்பு விஜய் நடித்த படங்கள் தோல்வியைசந்தித்த நிலையில் இந்த படம் விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்தது.
விஜய் கடந்த 1998-ஆம் ஆண்டு பூவே உனக்காக படத்தை பார்த்துவிட்டு லண்டன் தொழிலதிபரின் மகள் சங்கீதா விஜய்யை பார்க்க வந்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற 25 வயது மகனும், திவ்யா சாஷா என்ற 20 வயது மகளும் உள்ளனர். தொடக்கத்தில் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்துகொண்ட சங்கீதா, சமீப காலங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமலே இருந்து வந்தார்.
திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சூழலில் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சங்கீதா கடந்த ஏப்ரல் 2021-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சங்கீதாவுக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல வழக்கறிஞர்களும் ஆஜராகியுள்ளனர். அந்த புகார் மனுவில், தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அவருடனான தொடர்பை துண்டித்துவிடுவதாக உறுதியளித்த கணவர் விஜய், இன்று வரை அந்த நடிகையுடனான உறவை தொடர்ந்து வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 2021- பிப்ரவரி 2022 -ல் சமாதானம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, இந்த விவகாரத்தை மேற்கொண்டு கொண்டுசெல்ல அப்போது விரும்பவில்லை. ஆனாலும், எனது கனவர் நடிகையுடனான அந்த உறவை கைவிடுதாய் இல்லை. வீட்டிற்குள்ளேயே நான் தனித்து விடப்பட்டேன்.
மேலும் அந்த நடிகை, தனது கணவர் விஜய்யுடன் பல்வேறு பொது இடங்களுக்கு செல்வதும் அங்கு அவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்னிடம் எந்தவித வருத்தமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. இந்த திருமணத்தை மீறிய உறவால், வீட்டில் இருந்த எனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. நிதி தொடர்பான எனது சுதந்திரமும் முடக்கப்பட்டது.

எனவே, இந்த திருமண உறவை உடனடியாக முடித்து வைக்கவேண்டும். வழக்கு நடைபெறும் போது மாதாந்திர ஜீவனாம்சமும், வழக்கு முடிவுக்கு வந்த பிறகு முழு ஜீவனாம்சமும் தரவேண்டும்’ என அந்த மனுவில் சங்கீதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தனி அறையில் வைத்து விசாரிக்குமாறும் இந்த விவகாரத்தை ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், யூடியூப் சேனல்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 20-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணையில் விஜய் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உச்ச நடிகராக இருந்து, முதலமைச்சர் கனவோடு அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்.. தனிமனித வாழ்வில் தனது மனைவி மீது குடும்ப வன்முறையை நிகழ்த்தியும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.