ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வரும் தேவபிரதா மொகந்தி நிலக்கரி விற்பனைக்கு லைசென்ஸ் பெற்ற ஒரு வர்த்தகரிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றுள்ளார். அப்போது விஜிலென்ஸ் அதிகாரிகள் மொகந்தியை கையும் களவுமாகப் பிடித்தனர். உடனடியாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடுகளில் ஒரே நேரத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வர்த்தகர் சுரங்கத் துறை துணை இயக்குநர் தேவபிரதா மொகந்திக்கு பாடம் புகட்ட நினைத்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வர்த்தகரிடம் கொடுத்து அனுப்ப சுரங்கத் துறை துணை இயக்குநர் தேவபிரதா மொகந்தியிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக சுரங்கத் துறை துணை இயக்குநர் தேவபிரதா மொகந்திகை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடுகளில் ஒரே நேரத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டு அலமாரிகளில் கட்டுக்கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடி பணத்தை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மொகந்தியின் அலுவலக அறை மேசை டிராயரில் ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் புவனேஸ்வரில் 2 அடுக்கு மாடி கொண்ட வீட்டுக்கான ஆவணங்கள், 130 கிராம் தங்கம் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.