ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல்துறையினர் வாகன தணிக்கையின் போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரில் அட்டைப்பெட்டி முழுக்க 528 கர்நாடக மதுபாக்கெட்டுகளை சிப்காட் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காரை ஓட்டி வந்தவர், கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது