ரயில்களில் உணவுகளைப் பொறுத்தவரை யூஸ் & த்ரோ சில்வர் டிரேக்களை ரயில்வே ஊழியர்கள் ரயிலில் உள்ள தண்ணீர் டேப்பில் வைத்தே சுத்தமாக கழுவி ஒரு இடத்தில் பத்திரமாக வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்தியாவில் குடும்பத்துடன் நீண்ட தூர பயணங்கள், தொழில் தொடர்பான பயணங்கள் என என்ற பயணங்களுக்கு பேருந்துகள், விமானம்கள் மற்றும் ரயில்கள் என பல்வேறு வகை போக்குவரத்துகள் இருந்தாலும், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் தருவது ரயில்வே துறை என்பதால் மக்கள் பெரிதும் அதையே விரும்புகிறார்கள். ரயில்வே சேவையை நம்பும் மக்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

இப்படி இந்திய மக்களின் இரண்டறக் கலந்த ரயில் பயணத்தில் வீட்டில் இருந்து உணவு கொண்டு செல்லாவிட்டாலும் கூட ரயிலுக்குள் விற்பனையாளர்கள் கொண்டு வரும் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள முடியும். அதேவேளையில், ரயில்களில் விற்பனை செய்யப்படும் இந்த உணவின் தரம் மோசமாக இருப்பதாக அவ்வப்போது பயணிகள் குற்றம் சாட்டுவதை பார்க்க முடியும். ஆனால், ரயில் பயணிகளை அதிர வைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது.
அதாவது, ரயில்களில் உணவுகளைப் பொறுத்தவரை யூஸ் & த்ரோ சில்வர் கலர் கொண்ட ஒரு டிரேவில் வைத்து பெரும்பாலும் வழங்கப்படும். இந்நிலையில் அம்ரித் பாரத் ரயிலில் Amrit Bharat Express (Train No. 16601) டிரேக்களை ரயில்வே ஊழியர்கள் ரயிலில் உள்ள தண்ணீர் டேப்பில் வைத்தே சுத்தமாக கழுவி ஒரு இடத்தில் பத்திரமாக வைக்கும் காட்சிகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர வைத்திருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். “ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இந்த டிரேவில் மீண்டும் உணவு பார்சல் செய்து பயணிகளுக்கு எடுத்து செல்ல இப்படி சுத்தம் செய்கிறார்களா? என நெட்டிசன்கள் ரயில்வே அமைச்சகத்தையும் டேக் செய்து நெட்டிசன்கள் இந்த பதிவுகளை போட்டு வருகின்றனர்.