“குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், மீறி நடந்தால் அரசியல்வாதிகள், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் திராவிட மாடல் அரசு என மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்பதைச் சட்டம் – ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவிட்டுள்ளார்.