2017 ஏப்ரல் வரை எப்படி இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தோமோ, அதுபோல் ஒன்றிணைந்து விட்டோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்” என TTV. தினகரன் தெரிவித்தார். நேற்று மோடி பிரச்சாரத்துக்குப் பிறகு NDA கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது TTV. தினகரன் பேசுகையில், “எனக்கும் பழனிசாமிக்கும் இடையே இருப்பது ஒரு கூட்டுக் குடும்பப் பிரச்சினை. எங்களைச் சேர்க்க மத்திய அமைச்சர் அமித் ஷா 2021-ஆம் ஆண்டே முயற்சி செய்தார்.
அப்போது முடியாமல் போய்விட்டது. 2026-ல் பிரதமர் மோடி, என்னையும் பழனிசாமியையும் ஒன்றாக இருந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு உதவி செய்ய வேண்டும், கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இது நடந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. அப்போதே நான் ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு பழனிசாமியும் ஒப்புதல் அளித்தபின் கூட்டணியில் இணைந்து இருக்கிறோம். இதில் அச்சுறுத்தலோ, அழுத்தமோ யாருக்கும் இல்லை. 2017 ஏப்ரல் வரை எப்படி இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தோமோ, அதுபோல் ஒன்றிணைந்து விட்டோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்” என TTV. தினகரன் தெரிவித்தார்.