அரியலூர் அருகே சாலை விபத்து ஏற்பட்டதாக 108 ஆம்புலன்ஸ்க்கு, வந்த தகவலின் பேரில் அவசரகால மருத்துவ நுட்புணர் ஆனந்தராஜ் மற்றும் அவசரகால ஓட்டுநர் கொளஞ்சியப்பன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அன்பரசன் என்பவர் உயிரிழந்த நிலையிலும், தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராஜேஷை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ராஜேஷ் அணிந்திருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் ஆண்ட்ராய்டு போன் ஆகியவற்றை அவரது உறவினரான ராஜேஷ் என்பவரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். துயரமான நிலையிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயல், அரியலூர் மாவட்டத்தில் பெரும் நெகிழ்ச்சியையும், பொதுமக்களிடத்தில் வரவேற்பையும் பெற்றுள்ளது.