தமிழக அரசால் வழங்கப்பட்டு, தமிழக காவல்துறையின் மூலம் அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட நான்கு புதிய காவல் வாகனங்களின் சேவையை, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.
இந்த நான்கு புதிய வாகனங்களில், இரண்டு வாகனங்கள் அவசர உதவி எண்ணான 100-ன் சேவைக்காகவும், அதிவிரைவுக் குழுவின் (QRT) சேவைக்காக ஒரு வாகனமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படை(SP-SF) சேவைக்காக ஒரு வாகனமும் அரியலூர் மாவட்ட காவல் துறையில் இணைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R. முத்தமிழ்செல்வன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ரகுபதி (அரியலூர் உட்கோட்டம்), . ரவிச்சக்கரவர்த்தி அவர்கள் (ஜெயங்கொண்டம் உட்கோட்டம்), .ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம்), காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள்.