கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, தெற்கு ஊராட்சி ஒன்றியம், “உங்களுடன் ஸ்டாலின்” “சிறப்பு திட்டம் கோமங்கலம், கோமங்களாபுதூர், லக்காம்பட்டி, எஸ். மலையாண்டிபட்டினம். ஊராட்சிகள் இணைந்து. கெடிமேடு அருள்ஜோதி மகாலில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாத், தெற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், சிலக்காம்பட்டி முன்னாள் துணைத் தலைவர்.சம்பத், கோமங்கலம் முன்னாள் தலைவர் ராமு (எ) ராமர், மாவட்ட பிரதிநிதி மணிராஜ், அனைவரும் இணைந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள். அதுசமயம் லட்சுமி, முத்துக்குமார், மயில்சாமி, முன்னாள் துணைத் தலைவர் ராமராஜ், முன்னாள் துணைத் தலைவர் மற்றும் கழக உடன்பிறப்புகளும், திரளான ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.