ஆண்டர்சன்- டெண்டுல்கர் கோப்பை கடைசி நாள் இங்கிலாந்து அணி வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் 5-வது போட்டி 5-ஆம் ஆட்டத்தில் இங்கிலாந்து வென்று 3-1 என்ற கணக்கில் தொடர் எப்படியும் இங்கிலாந்துதான் வெல்லப்போகிறது என்ற நிலையே இருந்தபோது, “நம்பிக்கை” என்ற ஒற்றை வார்த்தையை மூச்சாக பிடித்துக்கொண்டு 25-வது நாள் கடைசி பந்தை 143 கி.மீ வேகத்தில் வீசி அட்கின்சன் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தெடுத்து கடைசி 40 நிமிடங்களில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை தனியாளாக மீட்டு எடுத்த முகம்மது சிராஜ் 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றி பெற்று 2-2 என தொடரை இந்தியா சமன் செய்தது.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மீண்டும் இங்கிலாந்து வெற்றி பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தது. இதனையடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடிக்க வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது.இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. இதனால் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.
106 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து தடுமாறிய போது, இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் 98 பந்துகளில் 111 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 152 பந்துகளில் 105 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இருவரும் ஆட்டமிழந்தவுடன் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் கிறிஸ் வொக்ஸ் கையில் காயம் அடைந்துள்ள நிலையில் தேவைப்பட்டால் ஒரு கையுடன் நான் விளையாடுவேன் என்று கூறி இருக்கின்றார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற உச்சகட்ட டென்ஷன் ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில், 4-ஆம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ ரூட், “முகம்மது சிராஜ் ஒரு சிறந்த வீரர், ஒரு உண்மையான வாரியர். அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அவரிடம் சில நேரங்களில் ஒரு போலியான கோபம் இருக்கும், அதை நான் எளிதாகக் கண்டுபிடித்து விடுவேன். உண்மையில் அவர் ஒரு நல்ல மனிதர் என்பது எனக்குத் தெரியும். மேலும், “முகம்மது சிராஜ் தனது அணிக்காக தனது முழு உழைப்பையும் கொடுக்கிறார். களத்தில் அவர் கடுமையாக உழைக்கிறார். அதனால்தான் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அவரது உழைப்பும், திறமையும் தான் அவரது வெற்றிக்குக் காரணம்” என ஜோ ரூட் தெரிவித்தார்.
ஏனென்றால், இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளிலும் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடிய ஒரே வீரர் முகம்மது சிராஜ் மட்டும்தான். ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், இந்திய பந்துவீச்சு தாக்குதலை அவர் திறம்பட வழி நடத்தினார். இந்தத் தொடரில் இந்திய அணி சார்பில்183 ஓவர்கள், 1113 பந்துகளை வீசி 23 வீழ்த்தி இருக்கிறார். மேலும் 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்தபோது, முகம்மது சிராஜ் தனது அபார பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார்.
மேலும் தொடர் முழுவதும் ஓயாத உழைப்பு ஜோ ரூட்டின் இந்தப் பாராட்டுக்கு முகம்மது சிராஜ் முற்றிலும் தகுதியானவர். முகம்மது சிராஜின் களத்திலுள்ள ஆக்ரோஷம் என்பது எதிரணியை மிரட்டுவதற்காக அல்ல, அது நாட்டிற்காக வெற்றி பெற வேண்டும் என்ற அவரது உணர்வின் வெளிப்பாடு என்பதை தான் ஜோ ரூட் சுட்டிக் காட்டி இருக்கிறார். முகம்மது சிராஜின் இந்த அர்ப்பணிப்பு எதிரணி வீரர்களின் மரியாதையையும் பெற்றுள்ளது.
இந்த தருணத்தில் 339 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 35 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகளும் தேவைப்பட்டது. 5-ஆம் ஆட்டத்தில் இங்கிலாந்து வென்று 3-1 என்ற கணக்கில் தொடர் எப்படியும் இங்கிலாந்துதான் வெல்லப்போகிறது என்ற தருணத்தில் முகம்மது சிராஜ் ஆக்ரோஷமாக பந்து வீசி ஜெமி ஸ்மித் விக்கெட்டை 2 ரன்களில் கைப்பற்ற, ஜெமி ஓவர்டன் 9 ரன்களில் முகம்மது சிராஜ் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆனார். இதேபோன்று ஜாஸ் டாங்க், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் டக் அவுட் ஆக கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வொக்ஸ் தனது உடைந்த கையோடு பேட்டிங் செய்ய வந்தார்.
இதனால் இந்திய அணி வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்களும் தேவைப்பட்டது. அட்கின்சன் தனி ஆளாக நின்று போராடி சிக்ஸர் அடித்தார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு பற்றி கொண்டது. உடைந்த கையோடு கிறிஸ் வொக்ஸ் பந்துகளை எதிர் கொள்ளக்கூடாது என்ற பாணியில் அட்கின்சன் விளையாடினார். எனினும் முகம்மது சிராஜ் கடைசி பந்தை 143 கி.மீ வேகத்தில் வீசி அட்கின்சன் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தெடுத்து இங்கிலாந்து அணி 367 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. கடைசி 40 நிமிடங்களில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை தனியாளாக மீட்டு எடுத்த முகம்மது சிராஜ் 2-2 என தொடரை இந்தியாவை சமன் செய்ய வைத்தார்.
ஆண்டர்சன்- டெண்டுல்கர் கோப்பை விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சமி, அஸ்வின் உள்ளிட்ட எந்த சீனியர் வீரர்களும் இல்லாமல் கில் தலைமையில் இந்திய அணி களம் இறங்கி இத்தகைய சாதனையை படைத்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்தின் தொடர் நாயகன் ஹாரி புரூக், “இன்று காலை நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் களத்திற்கு வந்தோம். களத்தில் இரண்டு சிறந்த வீரர்கள் இருந்ததால், நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். ஆனால், இந்தியர்கள் கடுமையாகப் போராடினார்கள், குறிப்பாக முகம்மது சிராஜ் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. அவர் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் தகுதியானவர்” என தெரிவித்தார்.
மேலும், “பந்துவீச்சுக்கு ஆடுகளம் சற்று சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் மேகமூட்டமான வானிலை காரணமாக பந்து அதிகமாக ஸ்விங் ஆனது. நான் முன்பே சொன்னதுபோல், முகம்மது சிராஜ் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒவ்வொரு பந்தையும் 85 மைல் வேகத்திற்கு மேல் வீசினார். இந்தத் தொடர் அவருக்கு மிகவும் அபாரமாக அமைந்தது, இந்தத் தொடரில் அவர் செய்த சாதனைகளுக்காக நான் அவரை மிகவும் மதிக்கிறேன்,” என்று முகம்மது சிராஜுக்குப் புகழாரம் சூட்டினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகம்மது சிராஜ் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் நடப்பு தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் சிராஜ் பெற்று இருக்கிறார். கடைசி டெஸ்ட் சிறப்பாக விளையாடிய முகம்மது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பும்ரா 3 டெஸ்ட்கள் மட்டுமே விளையாட, அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்திய முகம்மது சிராஜ், 5 டெஸ்ட்களிலும் ஓய்வின்றி விளையாடி 183 ஓவர்கள், 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை ‘சிராஜ் தொடர்’ என்று முகம்மது சிராஜ் மாற்றி எழுதியுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.