கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, LIC காலனி கடைக்கு உட்பட்ட முதியோர் தமிழக “முதலமைச்சரின் தாயுமாணவர்” திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி, LIC காலனி கடைக்கு உட்பட்ட முதியோர் தமிழக “முதலமைச்சரின் தாயுமாணவர்” திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று நியாய விலை பொருட்களை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நகர திமுக வடக்கு செயலாளர்.இரா. நவநீதகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் அழகப்பன், பொதுக்குழு உறுப்பினர்.ஜெயக்குமார், நகர மன்ற துணைத் தலைவர்.கௌதமன், நகர துணை செயலாளர் தர்மராஜ், நாச்சிமுத்து, பாத்திமா அக்பர், அப்பாஸ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.