இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் வரலாறு, ஒருபுறம் வீரேந்தர் சேவாக் மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய இருவரின் விளையாட்டை நினைவூட்டும் வகையில் விளையாடும் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரான இளம் வீரர் ரிஷப் பந்த் இந்திய அணியில் வருகைக்கு பின் முடிவுக்கு வந்தது எண்ணலாம். இதனால் மகேந்திரசிங் தோனியின் ரசிகர்கள் ரிஷப் பந்த்தின் ஆட்டத்தை வெறுத்து, தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை அடுக்கடுக்காக வைத்தனர்.
மகேந்திரசிங் தோனியின் இடத்திற்கு வந்த ரிஷப் பந்த் சர்வதேச போட்டிகள் விளையாட வந்த சமயத்தில் மகேந்திரசிங் தோனியின் ரசிகர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ரிஷப் பந்த் ஆட்டமிழந்து வெளியேறும்போது பலரால் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறுகிறார் என விமர்ச்சிக்கப்பட்டார். மேலும் மனம் போன போக்கில் இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப விளையாடும் ரிஷப் பந்திற்கு மேலும் அழுத்தத்தை கொடுத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தனர். மேலும் பல முன்னாள் வீரர்கள் பல அறிவுரை கூறி ரிஷப் பந்தை மெல்ல மெல்ல செதுக்கியதன் விளைவு இன்று சாதனைகள் படைத்தது வருகிறார்.
2018-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடந்த போட்டியில் அறிமுகமான ரிஷப் பந்த் அறிமுக டெஸ்ட் 7 கேட்சுகளைப் பிடித்து புதிய சாதனை படைத்தார். இந்திய விக்கெட் கீப்பர்களில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிக கேட்சுகள் பிடித்தவர் என்ற வரலாற்று சாதனையை ரிஷப் பந்த் நிகழ்த்தினார். மேலும் தனது அறிமுக டெஸ்டில் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் இதே போட்டியில் ரிஷப் பந்த் படைத்தார்.
மேலும் இதே தொடரில் முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் ரிஷப் பந்த் தனது அதிரடி ஆட்டத்தால் அசத்தி 100 ரன்களை கடந்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதே ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்து ரிஷப் பந்த் அசத்தினார். இதன்மூலம் ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள் ஜாக் ரஸ்ஸல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் உலக சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப் பயணம் மேற்க்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடியது. இதில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் போது லஹிரு குமார வீசிய அதிவேக ஷார்ட் டெலிவரி பந்து, ரிஷப் பந்தின் இடது மணிக்கட்டில் பலமாகத் தாக்கியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்க பகுதியில், சரண்ஷ் ஜெயின் ஆட்டமிழந்த பிறகு பந்த் மீண்டும் களம் புகுந்தார்.
அப்போது லஹிரு குமார மீண்டும் ஒரு ஷார்ட் டெலிவரி மூலம் பந்தை வீசினார். ஆனால், இந்த முறை அதனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ரிஷப் பந்த், ஃபைன் லெக் திசையில் ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை விளாசினார். பந்தின் இந்த அசாத்தியமான ஷாட், கொழும்பு மைதானத்தின் கூரையைத் தாக்கி மைதானத்திற்கு வெளியே சென்றது. அந்தப் போட்டியில் சுப்மன் கில்லின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்த கையோடு அரைசதத்தை நோக்கிய பயணத்தின் போது, தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்தார்.
இதன்முலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், தற்போது 2948 ரன்களுடன் முதலிடத்திலும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார்.