கோயம்புத்தூரில் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வசூலித்து விட்டு, “இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லாவிட்டால் இறங்கு” என அடாவடியாகப் பேசிய தனியார் பேருந்து நடத்துநரை, சிங்கம் போல சிங்கிளா நடுரோட்டில் பேருந்தை மறித்து லெப்ட் ஹேண்டில் சிங்கப்பெண் டீல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறப் பெண், ‘முறத்தால் புலியை விரட்டும்’ வீரமுடையவர்; தமிழ் வீரத்தாய், தனது மகன் போரில் முதுகில் அடிபட்டு மாய்ந்தான் என்னும் பொய் வதந்தி கேட்டே, கொதிப்படைந்து, “இது உண்மையாயின் அவனுக்குக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிய முலைகளை வாளால் அறுத்தெறிவேன்”, எனச் சூளுரைத்தவர் என்பது வேலு நாச்சியார் ஆங்கிலேயருக்குத் தண்ணீ காட்டியதும், லட்சுமி சாகலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ‘ஜான்சி ராணி படைப்பிரிவின்’ தலைவியாக செயல்பட்டார் என்பதும் வரலாறு.
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காக பெண் பயணி ஒருவர் 68 வழித்தடம் கொண்ட தனியார் பேருந்தில் ஏறியிருக்கிறார்.
வழக்கமாக உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல, அரசு மற்றும் அனைத்து நகர பேருந்துகளிலும் 7 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெண் பயணிக்கு மட்டும் நேற்றைய தினம் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வாங்கினாராம் நடத்துநர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, “7 ரூபாய் டிக்கெட்டுக்கு எதுக்கு 10 ரூபாய் வாங்குறீங்க அண்ணா?” என்று கேட்டுளளார்.
ஆனால் அதற்கு நடத்துநர், “நான் அப்படித்தான் வாங்குவேன்… இஷ்டம் இருந்தா பேருந்தில் வா, இல்லாட்டி இறங்கி போ.. உனக்கு எங்காவது கம்ப்ளைண்ட் பண்ணணுமா? வேணும்னா RTO-கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ” என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார்.

நடத்துநரின் இந்த அலட்சியமான பதிலை, அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ஓ அப்படி போகுதா… பார்த்துக்கலாம் என்று உடனே முடிவு செய்த அந்த பெண், பேருந்தில் இருந்து கீழே இறங்கி, அதே பேருந்திற்கு முன்புறம் வந்து நடுரோட்டில் நின்றுகொண்டு, அந்த பேருந்தை நகர விடாமல் மறித்து, தன்னுடைய கேள்விக்கு பதில் வேண்டும் என்றார்.7 ரூபாய்க்கு 10 ரூபாய் எப்படி டிக்கெட் வாங்கலாம்? அதிகமாக வாங்கியதுடன், கேட்ட கேள்விக்கும் சரியாக பதில் சொல்ல மாட்டீர்களா? என்று கொந்தளித்து பேசினார்.
இதை பார்த்து பேருந்தில் இருந்த சக பயணிகளும், பொதுமக்களும் பெண்ணுக்காக ஆதரவு கேட்ட திரண்டனர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அப்படியே நின்று விட்டார்கள். “இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லாவிட்டால் இறங்கு” என அடாவடியாகப் பேசிய நடத்துநரை, சிங்கம் போல சிங்கிளா நடுரோட்டில் பேருந்தை மறித்து லெப்ட் ஹேண்டில் சிங்கப்பெண் டீல் செய்த வீடியோ சமூக வைரலாகி வருகின்றது.