பன்னெடும் காலமாக இந்த புவி நிலவரையில் அடித்தளம் இட்டு மண்ணை பொன்னாகி உண்டு உறங்கிட உழைப்பின் அடையாளத்தை பிறப்பின் அடையாளத்தை இந்த உலகிற்கு வெளிச்சம் காட்டிய பூர்வ குடிகளின் அடையாளம். கொஞ்சம், கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருவதை இந்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளிலும் பூர்வ குடிமக்களின் தலைமுறைகளின் வாழ்வியல் சரியாக அமைந்திருக்கிறதா என்றால் இல்லை. அவர்களின் கடந்த கால வீர வரலாற்றையும் உண்மை பொதிந்த அவர்களின் கலாச்சாரம் நாகரீகம் பண்பாடு இப்படி ஏராளமான அவர்களின் பதிவுகள் மறுக்கப்பட்டும் மாற்றட்டும் உள்ளது. பல்வேறு பொய்யான திரிபுகளை இவர்களின் மீது திணித்து அவர்கள் மீது சவாரி செய்து வருகின்றனர்.
ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளைப் போல, சட்டையை உரிக்கும் பாம்புகளைப் போல, பிணம் தின்னுகிற கழுகுகளை போல ஆதிக்க சக்திகளின் அத்து மீறல்களும் அடாவடித்தனங்களும் அந்த காலகட்டங்களிலேயே குறை கூடிய புண்ணாக இருந்திருக்கிறது. வீர மறவர்களாக வேல் கம்பும் ஈட்டியும் இலக்கை நோக்கி எரிந்த அந்தச் சமூகம் வரலாறு புதையுண்டு போய் கிடக்கிறது.

நல்ல கல்வியானமும் வீரமும், வேளாண்மை தொழிலும் என பல்கலை வித்தகர்களாய் விதையாக இருந்தவர்களை எங்கிருந்தோ வந்தேறிகள் நயவஞ்சகத்தோடு உறவாடி இந்த ஆதி குடிகளான இவர்களை ஆதிக்கம் செய்து மண்ணையையும் வாழ்வுரிமையையும் பறித்து. சாதி என்கிற ஒன்றை ஆயுதம் ஆக்கி இவர்கள் மீது சரமாரியான அம்புகள் பாய்ச்சப்பட்டது.
எறும்பு ஊற கல்தேய்ந்ததைப் போல் இவர்கள் ஆதிக்க சக்திக்கு கீழ்படிய வேண்டும் எனும் நிலையை கூட்டான்மையோடு வரலாற்றில் எப்படி ஆரியர்கள் நுழைந்தார்களோ அதைப்போலவே நாங்களே சமூகத்தில் உயர்ந்தவர்கள் நீங்கள் எங்களுக்கு அடிமை என்று அவர்களை நடத்தியும் அவர்தான் உரிமைகளை பறித்தனர்.
ஆண்டு வந்த இந்த ஆதிக்க சக்தி கூட்டங்களே பிற்பகுதியில் சாதியினும் கூராயுதத்தை கையில் எடுத்து இந்த நூற்றாண்டிலும் அதை கீழே போடாமல் கையில் இறுக்கி பிடித்துக் கொண்டுள்ளனர். பிறப்பால் அனைவரும் ஒன்றே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் பல்வேறு உதாரணங்களை முன் வைத்தாலும் ஆதிக்க வர்க்கத்தினரின் வன்மம் ஆணவம் இன்றும் மாறாமலே இருக்கின்றது.
உறையாக்கம்: நாகை டி கே ரமேஷ்