உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.திருநங்கை படம்
ஒடிசா மாநிலம், புரி கடற்கரை நகரில் அமைத்துள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆஷாட மாதத்தில் நடைபெறும் ரதயாத்திரை மிகவும் பிரசித்தமானது. இந்த ரதயாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் குவிவதுண்டு. வழக்கம்போல் இந்த ஆண்டும் ரத யாத்திரைக்காக புரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அப்படி இந்த உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயிலின் ரத யாத்திரை நிகழ்வில் நேற்று வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டது. இந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின் போது அதிகாலை 4 முதல் 4.30 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 50 பேர் காயம் அடைய 3 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால் மற்றும் மாவட்ட ஆட்சியர் சித்தார்த்த சங்கர் ஸ்வெயின் ஆகியோரை மாநில அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஒடிசா முதலமைச்சர் சரண் மாஞ்சி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “பக்தர்கள் மத்தியில் மஹாபிரபுவையும், சாரதாபாலியையும் காண வேண்டி ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், துரதிர்ஷ்டவசமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்காக நானும், எனது அரசாங்கமும் ஜெகநாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.” என சரண் மாஞ்சி தெரிவித்தார்.