கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரம் எஸ் என் அரங்கத்தில் உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் செ. வெள்ளிமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கும் வரைக்கும் தமிழ்நாடு அரசாங்கம் வீட்டு வாடகை குறைந்தபட்சம் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் வீட்டு வாடகை குறித்து வாடகை வீட்டு கட்டுப்பாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியும் அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தும் நில வங்கி அமைத்து அதில் வீடு அற்றோருக்கு தலா 5 சென்ட் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது
இந்த மாநாட்டில் கோயமுத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ச்சனன் அவர்களும், இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் புரட்சித்தம்பி அவர்களும், சிங்கை எஸ் பாலன் அவர்களும், சிங்கை என். முத்து அவர்களும் முன்னாள் கவுன்சிலர் சேதுவராசு அவர்களும் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆர் டி பழனி அவர்களும் கோயம்புத்தூர் வாடகை வீடு குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் சௌந்தர்ராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மாநாட்டில் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மேற்கு மண்டல பொறுப்பாளர் பி சி கண்ணன் அவர்களும் தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தியாக உதயசங்கர் ராஜலட்சுமி உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் முடியரசு அவர்களும் மற்றும் உழைக்கும் பெண்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.