சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலை தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி இரவு அவர்களை காவல்துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை, மடுவாங்கரை, பரங்கிமலை,.ஆதம்பாக்கம், வேளச்சேரி, கீழ்கட்டளை, மற்றும் நந்தம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.

ரிப்பன் மாளிகை வெளியே காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு இருந்ததும், போராடிய தூய்மை பணியாளர்களை தமிழக அரசு கையாண்ட விதமும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது. இந்நிலையில் இன்று மாலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு திருத்துறைப்பூண்டி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பு ஏற்பட்டது.