தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் K. N. நேரு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளைக் குறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். முன்னதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கோயம்புத்தூர் மாவட்ட மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், கோயம்புத்தூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், அ.ரவி, தளபதி முருகேசன் மற்றும் தொண்டர்கள் அமைச்சரை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.