தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பொறுப்பேற்று வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளராக இருந்த குமரன் அவர்கள் மதுரை மாநகராட்சிக்கு பணியிடை மாறுதலால் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய ஆணையாளராக V. நித்தியா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள V. நித்தியா அவர்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் நகர மன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரவேற்றார்.

இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள V. நித்தியா அவர்களை தேசிய முக்குலத்தோர் கழக மாநில அமைப்பு செயலாளர் G. விஜய கண்ணன் மற்றும் மாநில வியாபாரிகள் சங்க செயலாளர் பொள்ளாச்சி K. அபிராம் பிரசாத் மற்றும் வியாபாரிகள் சங்க மகளிர் அணி தலைவி மாரியம்மாள் அவர்களும் மற்றும் சாலையோரம் வியாபாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.