திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் ஒரே இடத்தில் கொட்டிச் சென்றதால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு வீசி எறியும் கழிவுகளை ருசிப்பதற்காக வரும் நாய்கள் கூட்டம் அதிகளவில் சாலையில் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் பீதி அடை ந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் இதுபோன்ற கோழிகளை கொட்டி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.