அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் ஜெயலலிதா வரையிலான அதிமுகவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 77 வயதான KA. செங்கோட்டையன், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், அதிமுகவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அரசியல் நடவடிக்கையை இன்று எடுக்கவுள்ளார்.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செங்கோட்டையன் செய்தார். அதனைத்தொடர்ந்து மாலையில் விஜய்யை நேரில் சந்தித்து செங்கோட்டையன் பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இன்று காலை 9 மணியளவிலேயே விஜய் பனையூர் அலுவலகம் வந்த நிலையில், தவெக நிர்வாகிகளும், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் முன்கூட்டியே வருகை புரிந்தனர். காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கோட்டையனுடன் தவெக-வில் இணைந்துள்ளனர்.

எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் ஜெயலலிதா வரையிலான அதிமுகவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 77 வயதான KA. செங்கோட்டையன், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், அதிமுகவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அரசியல் நடவடிக்கையை இன்று எடுக்கவுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இன்று இணையவுள்ளார். நேற்று விஜயை சந்தித்து 2 மணி நேரம் பேசிய நிலையில் இன்று கட்சி தாவல் நடக்கிறது. வளர்ந்து வரும் தவெக கட்சியில் இணையும் முதல் மூத்த தீவிர திராவிடத் தலைவர் இவரே ஆவார். இது தமிழகத்தின் மூத்த திராவிட அரசியல் தலைவர்களுக்கும், புதிய அரசியல் கட்சியான தவெகவிற்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாகப் பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் தனது கட்சி நுழைவை இறுதி செய்ய நேற்று விஜயை அவரது பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். கட்சி வட்டாரங்களின்படி, முக்கிய தலைவர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா கடந்த வார இறுதியில் செங்கோட்டையனை சந்தித்து அவரது இணைப்புக்கான ஆயத்த வேலைகளை முடித்தனர்.
விஜய்யின் நட்சத்திர செல்வாக்கினால் மக்கள் அவரை நோக்கி சென்றாலும், களத்தில் பணிகளை செய்ய, இரண்டு மூன்று தொகுதிகளை ஒரே நேரத்தில் கவனிக்க, மாநிலம் முழுக்க தொண்டர்களை ஒருங்கிணைக்க போதுமான தலைவர்கள் அவரிடம் இல்லை. அதற்கு செங்கோட்டையன் நல்ல தேர்வாக இருப்பார். தற்போது தவெகவின் கள அரசியல் பலம் குறைவாகவே உள்ளது. இந்த சூழலில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை இன்றும் தக்க வைத்துள்ளார்.
தவெக அவரை அங்கிருந்து போட்டியிடச் செய்தால், உள்ளூர் அரசியல் இயந்திரத்தை விட ரசிகர்களின் உற்சாகத்தால் இயங்கும் கட்சியில், விஜய்க்குப் பிறகு அவரே கட்சியின் இரண்டாவது உறுதியான சட்டமன்றத் தொகுதியைப் பெறுவார். அதாவது விஜய் அவரின் தொகுதியில் வெல்வது உறுதியாகும் பட்சத்தில், செங்கோட்டையன் வெல்வதும் உறுதியாகும். செங்கோட்டையனின் இந்த இணைப்பு தவெக மற்றும் அ.தி.மு.க. இடையேயான உறவை மேலும் சிக்கலாக்குகிறது.
விஜய் தொடர்ந்து பி.ஜே.பி. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் தாக்கி வந்தாலும், அ.தி.மு.க.வை நேரடியாக எதிர்கொள்வதைத் தவிர்த்து வந்தார். சி.என். அண்ணாதுரை முதல் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முதல் ஜெயலலிதா வரையிலான அ.தி.மு.க. தலைவர்களை அவர் அடிக்கடி தனது பேச்சுகளில் குறிப்பிடுவார். செங்கோட்டையனின் இந்த கட்சித் தாவல், தேர்தல் களத்தைப் பாதிக்கும். இதனால் இனி அதிமுக – தவெக கூட்டணி உருவாகாமல் போகும். செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்தால் அவர் எடப்பாடி உடன் கூட்டணி வைப்பதை விரும்ப மாட்டார். அதிமுக உடன் விஜய் செல்வதை செங்கோட்டையன் தடுத்து விடுவார். அ.தி.மு.க.வின் பழைய தலைவர்கள், பலரும் கூட தவெக பக்கம் வருவதற்கான வழியை செங்கோட்டையன் ஏற்படுத்தி கொடுப்பார். விஜயின் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
தவெக கட்சிக்கு வழக்கமான இரண்டாவது அல்லது மூன்றாவது அடுக்கு தலைமை இல்லை. தவெகவைப் பொறுத்தவரை, செங்கோட்டையன் முதல் மூத்த முகமாக இருப்பார். கொங்கு மண்டல முகமாக மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க மூத்த அரசியல் தலைவராக செங்கோட்டையன் தவெகவிற்கு பணிகளை செய்வார். யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் முன்னாள் புதுச்சேரி பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் முன்னிலையில் கட்சியில் இணையலாம் என்றும் தவெக வட்டாரங்கள் கூறின. செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் வாழ்க்கையை அறிந்த மூத்த வாக்காளர்களை தவெக கட்சிக்குள் ஈர்க்க முடியும். இப்போது தவெகவிற்கு இளைஞர்கள் ஆதரவே அதிகம் உள்ளது. வரும் நாட்களில் செங்கோட்டையன் வருகையால் மூத்தவர்கள் ஆதரவு அதிகரிக்கும்.
அதிமுக மீது அதிருப்தியில் உள்ள பாரம்பரிய வாக்காளர்கள் விஜய் பக்கம் திரும்பலாம். பொதுவாக அதிமுக வாக்குகள் எல்லாமே திமுக எதிர்ப்பு வாக்குகள்தான். இப்போது விஜய் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பலமான அதிமுக நிர்வாகிகளின் வருகை காரணமாக.. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளும் விஜய் பக்கம் செல்வார்கள். மேலும், கட்சியின் உள் கட்டமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுடனும் செயல்பட வாய்ப்புள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்தவர் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட முடியும். தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை செங்கோட்டையனின் அனுபவம் மேம்படுத்தும். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களையே வகுத்தவர்.
அதன்படியே விஜயின் திட்டங்களை அவர் வகுக்க முடியும். செங்கோட்டையன் வருகையால்.. தவெகவில் வாக்குச்சாவடி அளவிலான மேலாண்மை மற்றும் அடிமட்ட ஒருங்கிணைப்பு மிகவும் வலுவடையும். கிராமப்புற மற்றும் பாரம்பரிய வாக்காளர்களிடையே TVK-வின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் மிகவும் சீரானதாக மாறும். இளம் கட்சி உறுப்பினர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலையும், mentoring-ஐயும் அவர் வழங்குவார். இது சிக்கலான தேர்தல் சூழ்நிலைகளை எதிர்கொள்ள கட்சிக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.