இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களாக மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் பெயர்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி ஜந்தர் மந்தரின் போராட்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வருகிறார்.
அபிஜித் தீப்கே செல்லும் இடங்களில் கட்டமைப்பு மோசமாக இருந்தால், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று நியூஸ் 24 தொலைக்காட்சி நடத்திய ஜென் ஸீ கருத்தரங்கில் அபிஜீத் தீப்கே பங்கேற்றிருக்கிறார். அதில் அவரிடம், அபிஜீத் தீப்கேவிடம் ராபிட் ஃபையர் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார்? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “தமிழ்நாட்டின் மு.க. ஸ்டாலின், கேரளத்தின் பினராயி விஜயன் மற்றும் டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால்” என்று அபிஜீத் தீப்கே பதிலளித்தார். தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக மு.க. ஸ்டாலினும், கேரளத்தை சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக பினராயி விஜயனும், டெல்லியை கல்வியின் சிறந்த மாநிலமாக அரவிந்த் கெஜ்ரிவாலும் மாற்றியதாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.