சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் தவெக மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன்.
என் மீது ஒரு துளி ஊழல் கரை படியவும் விடமாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி இந்த இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது என விஜய் பேசி நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று தவெக யாரும் எதிர்பார்க்காத வகையில் 107 இடங்களில் வென்று, ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவில் விஜய் முதலமைச்சரானார். இருப்பினும், அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு நேராக தவெகவில் இணைந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய “மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம்; தொடவும் விட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்!” வீராப்பாகப் பேசி 107 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு, சில அரசியல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பில் உள்ள விஜய் அரசு, பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ளன.
பூரண மதுவிலக்கு, ஊழலற்ற ஆட்சி போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தள்ளாடுகிறது. இந்த ஐந்து மாத ஆட்சி காலத்தில் தினமும் நடைபெறக்கூடிய கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், மக்களின் போராட்டங்கள் என ஒருபுறம்; இன்னொருபுறம் தொடர் மின்வெட்டு. சிறுகுறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் சுய மின் உற்பத்தி மூலம் மட்டுமே செயல்படும் அவல நிலை.
மேலும் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்காத காரணத்தால் வழக்கமான அளவுக்கு நடைபெறவில்லை. ஆகையால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.1,100 முதல் ரூ.1,350 வரை விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசி, தற்போது சில்லறை சந்தையில் ரூ.1,800 முதல் ரூ.2,100 வரை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. “சம்பளம் ஏறவில்லை, ஆனால் சோற்றுக்கே இந்த அளவுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது” என்று சாமானிய மக்களும் இல்லத்தரசிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இப்படி ஒரு சூழ்நிலையில் மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாஇருவருமே அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள். அவர்களை தனது சுயநலத்துக்காக, குதிரை பேரத்தில் தங்களது எம்எல்ஏ பதவியை விட்டு விலகினார்கள். அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. ஆனால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களால் ஊருக்குள் வோட்டுக் கேட்டுப் போகமுடியவில்லை. எங்கே போனாலும் பொதுமக்கள், வாக்காளப் பெருமக்கள் விரட்டுகிறார்கள். ஊடகங்களில் இந்தக் காட்சிகள் அதிகமாக வரத் தொடங்கி இருக்கின்றன.
‘துரோகியே வெளியில் போ’ என்று மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலையும், தாராபுரத்தில் சத்தியபாமாவையும் மக்கள் விரட்டுகிறார்கள். ‘ஊருக்குள் வரத் தடை, துரோகி பட்டம், வேட்பாளர்கள் விரட்டி அடிப்பு. “கான்ஃபிடெண்டாக இருங்க என்று சொன்ன விஜயே இப்போது சந்தேகத்துடன் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு அச்சரப்பாக்கம் வடக்குப் பகுதியில் பரப்புரை செய்ய அமைச்சர் புஸ்சி ஆனந்த் போனார். மக்கள், ‘பணத்துக்காக கட்சி மாறிச் சென்று விட்டு மறுபடியும் வோட்டுக் கேட்க வருவது என்ன நியாயம்?’ என்று கேட்டார்கள். புஸ்சி ஆனந்தால் என்ன சொல்ல முடியும்? ‘கிராமத்தை விட்டு துரோகியே வெளியேறு’ என்று முழக்கம் எழுப்பினார்கள் மக்கள். எதிர்ப்பை தாக்குப் பிடிக்க முடியாமல் அமைச்சர் ஆனந்த் வெளியேறி விட்டார்.
சூழல் இப்படி இருக்கையில் தாராபுரத்தில் விஜய் டிராக்டர் ஓட்டியும், டீக்கடையில் மக்களுடன் சென்று டீ குடித்தும் வாக்கு சேகரித்திருக்கிறார். ஆனால், இடைத்தேர்தலில் முதலமைச்சர் நேரடியாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்பதே இதற்கு முன்னர் இருந்த நடைமுறை. மேலும் மதுராந்தகத்தில் ரோடு ஷோ பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் திடீரென பிரச்சார வாகனத்தை நிறுத்தி விவசாய நிலத்திற்குள் இறங்கி ஓடி சென்று விவசாய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
விஜய் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரங்களின் போது, “தெரு தெருவாய்” நடந்து சென்றும், மாட்டு வண்டி ஓட்டியும், கிராமத்து மக்களுடனும் விவசாயிகளுடம் வாக்கு சேகரித்தார். ஒரு இடைத்தேர்தலுகே “தெரு, தெருவாய் சுற்றும் நிலை என்றால் 5 மாதங்களுக்கு முன்பு வீசிய ‘விஜய் அலை’ எங்கே போனது என சாமானியன் மனதில் எழும் கேள்வி ..!?