November 10, 2026

இ பேப்பர்

ஆதி தமிழ் குடி எனும் ஆலமரம் வரலாற்று தொடர் ஆசிரியர் இராஜாராம்

ஆதி தமிழ் குடி எனும் ஆலமரம்: வரலாற்று தொடர்: ஆசிரியர் இராஜாராம்

பன்னெடும் காலமாக இந்த புவி நிலவரையில் அடித்தளம் இட்டு மண்ணை பொன்னாகி உண்டு உறங்கிட உழைப்பின் அடையாளத்தை பிறப்பின் அடையாளத்தை இந்த உலகிற்கு வெளிச்சம் காட்டிய பூர்வ குடிகளின் அடையாளம். கொஞ்சம், கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருவதை இந்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து துறைகளிலும் பூர்வ குடிமக்களின் தலைமுறைகளின் வாழ்வியல் சரியாக அமைந்திருக்கிறதா என்றால் இல்லை. அவர்களின் கடந்த கால வீர வரலாற்றையும் உண்மை பொதிந்த அவர்களின் கலாச்சாரம் நாகரீகம் பண்பாடு இப்படி ஏராளமான அவர்களின் பதிவுகள் மறுக்கப்பட்டும் மாற்றட்டும் உள்ளது. பல்வேறு பொய்யான திரிபுகளை இவர்களின் மீது திணித்து அவர்கள் மீது சவாரி செய்து வருகின்றனர்.

ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளைப் போல, சட்டையை உரிக்கும் பாம்புகளைப் போல, பிணம் தின்னுகிற கழுகுகளை போல ஆதிக்க சக்திகளின் அத்து மீறல்களும் அடாவடித்தனங்களும் அந்த காலகட்டங்களிலேயே குறை கூடிய புண்ணாக இருந்திருக்கிறது. வீர மறவர்களாக வேல் கம்பும் ஈட்டியும் இலக்கை நோக்கி எரிந்த அந்தச் சமூகம் வரலாறு புதையுண்டு போய் கிடக்கிறது.

நல்ல கல்வியானமும் வீரமும், வேளாண்மை தொழிலும் என பல்கலை வித்தகர்களாய் விதையாக இருந்தவர்களை எங்கிருந்தோ வந்தேறிகள் நயவஞ்சகத்தோடு உறவாடி இந்த ஆதி குடிகளான இவர்களை ஆதிக்கம் செய்து மண்ணையையும் வாழ்வுரிமையையும் பறித்து. சாதி என்கிற ஒன்றை ஆயுதம் ஆக்கி இவர்கள் மீது சரமாரியான அம்புகள் பாய்ச்சப்பட்டது.

எறும்பு ஊற கல்தேய்ந்ததைப் போல் இவர்கள் ஆதிக்க சக்திக்கு கீழ்படிய வேண்டும் எனும் நிலையை கூட்டான்மையோடு வரலாற்றில் எப்படி ஆரியர்கள் நுழைந்தார்களோ அதைப்போலவே நாங்களே சமூகத்தில் உயர்ந்தவர்கள் நீங்கள் எங்களுக்கு அடிமை என்று அவர்களை நடத்தியும் அவர்தான் உரிமைகளை பறித்தனர்.

ஆண்டு வந்த இந்த ஆதிக்க சக்தி கூட்டங்களே பிற்பகுதியில் சாதியினும் கூராயுதத்தை கையில் எடுத்து இந்த நூற்றாண்டிலும் அதை கீழே போடாமல் கையில் இறுக்கி பிடித்துக் கொண்டுள்ளனர். பிறப்பால் அனைவரும் ஒன்றே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் பல்வேறு உதாரணங்களை முன் வைத்தாலும் ஆதிக்க வர்க்கத்தினரின் வன்மம் ஆணவம் இன்றும் மாறாமலே இருக்கின்றது.

உறையாக்கம்: நாகை டி கே ரமேஷ்

US By-election results that could hinder Donald Trump’s agenda..!!

டொனால்ட் டிரம்பின் செயல்பாட்டை முடக்கும் அமெரிக்கா இடைக்கால தேர்தல் முடிவுகள்..!!

அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். இதற்கிடையே தான் தற்போது அமெரிக்காவின் நாடாளுமன்றத்திற்காக இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது. நம் நாட்டின் நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா என்று 2 சபைகள் உள்ளதுபோல அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 சபைகள் உள்ளன.

அந்த வகையில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களில் ஜனநாயக கட்சி 219 இடங்களிலும், டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சபையில் மெஜாரிட்டிக்கு மொத்தம் 219 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயக கட்சி 219 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்ததாக 35 செனட் இடங்களில் நடந்த தேர்தலும் ஜனநாயக கட்சி தான் அதிக இடங்களை கைப்பற்றியது. டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி பின்தங்கியது. இதன்மூலம் 100 இடங்கள் கொண்ட செனட் சபையில் மெஜாரிட்டிக்கு 51 இடங்கள் தேவை. தற்போது ஜனநாயக கட்சிக்கு 54 இடங்களும், டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 42 இடங்களும் உள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகள் என 2-லும் டொனால்ட் டிரம்ப் கட்சி பின்னடைவை சந்தித்து மெஜாரிட்டியை இழந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் தானாக டொனால்ட் டிரம்ப் பதவியை இழக்கமாட்டார். மீதமுள்ள 2 ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து அதிபராக இருப்பார்.

அதேவேளையில் ஜனநாயக கட்சியினரால் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான Impeachment நடவடிக்கை ஜனநாயக கட்சியால் 2 சபையிலும் கொண்டு வரலாம். இதற்கு முதலில் டொனால்ட் டிரம்ப் மீதான முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும். அதன்பிறகு டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட வேண்டும். அந்த தீர்மானத்தை நிறைவற்ற சிம்பிள் மெஜாரிட்டி போதும். தற்போது ஜனநாயக கட்சிக்கு சிம்பிள் மெஜாரிட்டி பிரதிநிதிகள் சபையில் உள்ளதால் இந்த தீர்மானம் வெற்றி பெறும்.

அதன்பிறகு இந்த தீர்மானம் செனட் சபைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் செனட் சபையில் 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. செனட் சபையில் 100 இடங்கள் உள்ளன. இதில் 3ல் 2 பங்கு என்றால் சுமார் 64 பேரின் ஆதரவு தேவை. ஆனால் ஜனநாயக கட்சிக்கு சிம்பிள் மெஜாரிட்டிக்கு தேவையான 54 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் டிரம்பின் 10 குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இது கிடைக்காது என்பதால் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கும் நடவடிக்கை செனட் சபையால் முறியடிக்கப்படும்.

தற்போதைய தேர்தல் முடிவில் டொனால்ட் டிரம்ப்க்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதல் இதுதான். அதுமட்டுமின்றி டிரம்ப் Impeachment நடவடிக்கையை இதற்கு முன்பும் எதிர்கொண்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது முதல் அதிபர் பதவி காலத்தில் எதிர்கொண்டுள்ளார். அப்போதும் பிரநிதிநிதிகள் சபையில் அவரை நீக்க ஒப்புதல் கிடைத்த நிலையில் செனட் சபையில் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

இந்த முறையும் ஜனநாயக கட்சி ‘இம்பிச்மென்ட்’ நடவடிக்கையை கொண்டு வந்தாலும் செனட் சபையிலுள்ள டொனால்ட் டிரம்ப் கட்சியினர் அவரை காப்பாற்றி விடுவார்கள். மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவால் டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவரது அரசு சார்ந்த நியமனம், புதிய சட்டங்களை கொண்டு வருவது உள்ளிட்டவற்றை 2 சபைகளிலும் நிறைவேற்ற முடியாது. டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் இனி டொனால்ட் டிரம்பால் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஜனநாயக கட்சியினரின் ஆதரவோடு மட்டுமே செயல்பட முடியும். இது டொனால்ட் டிரம்பின் செயல்பாட்டை முடக்க வாய்ப்புள்ளது.

40 villas for an IAS-IPS couple... rent alone amounts to Rs 1.8 crore!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிகளுக்கு 40 வில்லாக்கள்.. வாடகை மட்டும் ரூ.1.8 கோடி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிகர் அகர்வால் (IAS), அவரது மனைவி மூத்த காவல்துறை அதிகாரி பிரஷாகா மாத்தூர் (IPS) இவர்கள் அனந்தா ரிசார்ட்ஸ் நடத்தும் கோயல் பேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து மொத்தம் 40 வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியிருக்கிறது.

சந்தை மதிப்பை விட, மிகக் குறைவான விலைக்கு.. அதாவது ( அடிமாட்டு விலை ) ரூ.15-16.5 லட்சத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. ஷிகர் அகர்வால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த ரிசார்ட் நிறுவனத்திற்கு கட்டுமான அனுமதி, சுற்றுச்சூழல் சான்றிதழ் சரிபார்ப்பில் சலுகை மற்றும் சிறப்பு நிதிச் சலுகைகளை வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சொத்துக்களை வாங்கிய பின்னர்.. அதே நிறுவனத்திற்கு தம்பதியினர் அதை மீண்டும் வாடகைக்கு விட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகை வாங்க வேண்டும் என்பதுதான் இவர்களின் பிளான். இப்படி கச்சிதமாக பிளான் செய்திருந்தும்.. கவனக்குறைவாக செய்த சில விஷயங்களால் சிக்கிக்கொண்டனர்.

அனந்தா ரிசார்ட் நிறுவனத்திற்கு அரசு சலுகை வழங்கிய அதே நாளில், ஆல்வார் பகுதியில் 20 வில்லாக்கள் இந்த தம்பதி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. 2026-ல் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களில் ஐஏஎஸ் அதிகாரி 14 சொத்துக்களை மட்டுமே கணக்கில் காட்டியிருக்கிறார். இவரது மனைவி ஐபிஎஸ் அதிகாரி.. தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து தற்போது ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் இந்த தம்பதியினர் மற்றும் நிறுவன இயக்குநர்கள் மீது தீவிர விசாரணையை தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சுரண்டி பிழைத்தவர் விஜய்!!

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சுரண்டி பிழைத்தவர் விஜய்!!

100 ரூபாய் சினிமா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்றார்களா இல்லையா? ஊழலே இங்குதானே பிறந்தது. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அவர்களது வீட்டிலே அடுப்பெரியும். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து சுரண்டி பிழைத்தவர்தான் இன்று முதல்வராக இருக்கும் விஜய் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் அதிமுகவின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, விஜய்யை எம்ஜிஆர் என அவரது கட்சியினர் கூறி வருகிறார்கள். தான் எம்ஜிஆர் போல் நல்லாட்சியை தருவேன் என விஜய் தெரிவித்திருந்தார். எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்தக் கரங்களுக்கு சொந்தக்காரர்.

அவர் தனது சொத்துக்களை ஏழை, எளிய மக்களுக்கு எழுதி வைத்தார். அது போல் விஜய்யும் சொத்துகளை ஏழை, எளியவர்களுக்கு எழுதி வைப்பாரா? அதிமுகவை யாரும் அழிக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. அதிமுகவை அழிக்க நினைத்தால் அவர்கள்தான் அழிந்து போவார்கள். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜோசப் விஜய் முதல்வரான 6 மாதங்களில் விலைவாசி உயர்வு மக்கள வாட்டுகிறது.

அரிசி கிலோவுக்கு 20 ஏறி விட்டது. சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ 25 ஏறிவிட்டது. பருப்பின் விலை 60 சதவீதம் வரை ஏறியிருக்கிறது. புளி, எண்ணெய் என ஒட்டுமொத்தமாக மளிகை பொருட்கள் எல்லாம் 40 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பால் விலையும் ஏறி போச்சு!

அரிசி விலை உயரவே இல்லை என்கிறார் உணவுத் துறை அமைச்சர். மக்கள் குறித்து கவலை இருந்தால்தானே விலைவாசி உயர்வு குறித்து அவர்களுக்கு கவலை இருக்கும்? தற்போது தீபாவளி பண்டிகை வருகிறது. ஆவினில் தரமான இனிப்புகளை வாங்கலாம் என நினைத்திருந்தோம். அதுவும் விலை உயர்ந்துவிட்டது. இந்த ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என்பதை சிந்தித்து பாருங்கள்.

அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஏழை, எளிய மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் ஆட்சி நடத்தினோம். விஜய் என்ன சாதனை செய்தாரு, படத்தில் நடித்தாரு, கோடி, கோடியாக சம்பளம் வாங்கினாரு, எம்ஜிஆர் போல் இவர் என்ன சொத்தை எழுதியா வைக்க போகிறார்? நாட்டு மக்களுக்கும் அதிமுகவுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்!

அப்படியா தவெக தலைவர்கள் இருக்கிறார்கள், 100 ரூபாய் சினிமா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்றார்களா இல்லையா? ஊழலே இங்குதானே பிறந்தது. ரூ 100 டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு யார் வாங்குகிறார்கள், ஏழை எளிய மக்கள்தானே! அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அவர்களது வீட்டிலே அடுப்பெரியும். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து சுரண்டி பிழைத்தவர்தான் இன்று முதல்வராக இருக்கும் விஜய்!

நான் மக்களோடு மக்களாக இருந்து அவர்களது கஷ்டங்களை பார்த்துவிட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால் விஜய் ஒரு படத்திற்கு ரூ 200 கோடி வாங்கிக் கொண்டிருந்தாராம். அந்த 200 கோடியை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டாராம். அப்படியென்றால் சினிமாவை விட அரசியலில் நிறைய சம்பாதிக்கலாம் என எதிர்பார்த்துதானே வந்திருக்கிறார்?

ஒரு படத்திற்கு ரூ 200 கோடி என்றால் இதுவரை 70 படங்களுக்கு ரூ 14 ஆயிரம் கோடி ஊதியமாக வாங்கியிருக்கிறார். ஆனால் தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ 600 கோடி இருப்பதாக மட்டுமே கணக்கு காட்டியுள்ளார். மற்ற பணம் எல்லாம் எங்கே போனது. அவர் ரூ 200 கோடி சம்பளம் வாங்கினாருனு நான் சொல்லவில்லை, அவரது கட்சி தலைவர்கள்தான் சொல்லிக் கொள்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சீர்மிகு நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன்!!

சீர்மிகு நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன்!!

சொல்லிய வண்ணம் செயல் என்பதை போல் சொல்லிலும் செயலிலும் அசத்தி வரும் சிறந்த அலுவலர் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் வருகின்ற அனைத்து பயனர்களையும் நேரம் நீட்டிக்காது தாமதிக்காது துரிதமான முறையில் சேவை நடத்திட தாமே களத்தில் நின்று வாகன உரிமம் விபத்து சார்ந்த பிரச்சனைகளை நடுநிலைத் தன்மையோடு செயல்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறினர்.

மாவட்டத்தில் இவர் பொறுப்பு மேற்கொண்டதிலிருந்து ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாதவர்களை அனுமதிப்பதே இல்லை. விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகள் என அனைத்து இடங்களிலும் நடத்தி வருவதாகவும் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதன் அவசியத்தையும் வாகன ஓட்டிகளிடம் அலுவலகத்தில் அன்போடு தெரிவிக்கின்றார். தவறிழைத்த ஒருவர் சாதகப்படுத்த முயற்சிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாதவராகவும் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நியாயம் கிடைத்திட வழிவகை செய்வதோடு துணிவும் நேர்மையும் உள்ளவர் என்றும் சமூக அலுவலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

நாமும் மாவட்ட அளவில் அசத்தி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் பரபரப்பாக தனது பணியில் மும்முரமாய் இருந்தார் இந்தியா பஸ்ட் மாத இதழ் சார்பாக அவரைக் குறித்தும் அவர் கடந்து வந்த பாதையையும் வினவினோம். அவரும் இன் முகத்தோடு நம்முடன் பேச துவங்கலானார். சென்னை வடபழனியை பூர்வீகமாகக் கொண்ட நெடுஞ்செழிய பாண்டியன் தாய் தந்தையரால் ஒழுக்க சீராகவும் ஆன்மீக பற்றுடையவராகவும் மிகவும் கண்டிப்புடனும் வளர்க்கப்பட்டதாகவும் தந்தை எம் எஸ் குருசாமி, தாய் முத்துலட்சுமி அம்மையார். சென்னையில் பம்மலில் உள்ள பாலிடெக்னிக் படிப்பை நல்ல முறையில் தேர்ச்சி பெற்று பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிபிஏ வெற்றிகரமாக நிறைவு செய்து இத்துறையில் கால் பதித்தார்.

இவர் சார்ந்த குடும்பமும் சாலை போக்குவரத்து துறையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட குடும்பமாகும். அதனால் அனுபவரீதியிலேயே சாலை போக்குவரத்து சார்ந்த துறையில் மிகுந்த அறிவாற்றலை வளர்த்துக் கொண்டதோடு எவ்வித சவால் இருப்பினும் அதனை சமயோசிதமாக கையாளும் திறன் கொண்டவராகவும் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சிறப்புடன் செயல்பட்டதோடு சிறந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்று நற்பெயரோடு போற்றப்படுகிறார். அவரிடம் துறை குறித்து பேசலானோம்.அதற்கு அவர் நம்மிடம் உணர்வு பூர்வமாக மேலும் பேச துவங்கினார்.

28 வருட எனது பணி அனுபவத்தில் கோவில்பட்டி உளுந்தூர்பேட்டை, தற்சமயம் நாகப்பட்டினம் சாலை போக்குவரத்து அதன் மிக முக்கிய சேவைகள் என்ன? என்பதையும் எனது இந்த புனித பணியில் ஆர் டி ஓ என்பதை தாண்டி எப்படி பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என உணர்ந்தவன் உயர்ந்தவன் அல்ல ஒருபோதும் அப்படி நினைப்பதும் இல்லை என கூறினார். மனித உயிர் என்பது சாதாரணமல்ல அதுவும் குறிப்பாக சாலை விபத்துகளின் ஏற்படும் உயிர் சேதங்களை தடுத்திடுவதே எனது முதல் குறிக்கோள் ஆகும். பொதுமக்கள் சேவை இன்றியமையாதது நம்மால் அவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மை செய்திடல் வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாத பணியினை பண்புடனும் அன்புடனும் நேர்மையுடனும் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும்.

கடந்த கால விபத்துகளை கவனத்தில் கொண்டு அவ்வப்போது மக்களுக்கு சாலைவிழிப்புணர்வு குறித்த பணிகளும் தொடர்கிறது என்றும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையும் அவ்வப்போது உருவாகும். அதிவேகப் பயணம், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, பேருந்துகளை முறைப்படி இயக்காமல் இருப்பது, வாகன ஒட்டிக்கொண்டே செல்போன் பேசுவது மற்றும் இருசக்கர வாகனங்களில் மூவர் நால்வர் என பயணிப்பது உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவது என நீண்டு கொண்டே போகும்.

சில நேரங்களில் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற நில் தயார் புறப்படு என்பதையும் அவ்வப்போது மறந்து விடுகின்றனர். சில நேரங்களில் பாதை சாரிகளை வாகன ஓட்டிகள் அனுசரிப்பது என்பது கிடையாது. எனவே சாலையில் நடந்து செல்வோர் நடைமேடை அல்லது சாலையின் வலது இடது புற பாதுகாப்பான பகுதியை பயன்படுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு, தகுதி சான்று, அனுமதி பத்திரம், வரி வசூல், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு ஆகியவற்றை முழு மூச்சாக இத்துறை அலுவலக ஊழியர்களும் இவருக்கு உந்து சக்தியாக செயல்பட்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து ஊழியர்கள் தமது பணிகளை சரிவர செய்வதன் மூலம் பொதுமக்கள் இடையூறு இன்றி தங்கள் பணிகளை முடித்து செல்ல பிரதான காரணமாக இருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழக அளவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சிறப்புடன் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறையின் பணியும் மிகவும் சீரோடும் சிறப்போடும் செவ்வனே நடைபெற்று வருகிறது. சாலைப் போக்குவரத்து நம்முடைய அன்றாட வாழ்வில் எப்படி எளிதாக்குவது. அந்த சாலை விதிகளை சரியாக பின்பற்றுவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை. TN_51 என்ற இலக்கு வரிசையை கொண்ட இந்த அலுவலகம் பல்வேறு சாதனைகளை படைத்து அதே நேரத்தில் புது புது சவால்களையும் சந்தித்து எதிர்கொண்டு சாலை விதிகளை சரியாக கடைபிடித்திட செய்து புனிதமான மனித உயிர்களை பாதுகாக்க அனைவரும் உறுதி மேற்கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் மாண்புமிகு துறை அமைச்சருக்கும் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதோடு “விபத்து இல்லாத நாகை ” என்ற உயரிய நோக்கம் ஒன்றையே உணர்வு பூர்வமாக தான் வைத்திருப்பது.

மேலும் இந்த உயரிய நோக்கத்திற்கு பொதுமக்களும் முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கூறினார். மிகுந்த உத்வேகத்துடனும் தலைமை பண்புடனும் கடை நிலை ஊழியர்களையும் அரவணைத்து சிறந்த முறையில் பணி செய்து வரும் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனை நமது இந்தியா பஸ்ட் மாத இதழ் சார்பில் இவரது நல்ல குறிக்கோள் வெற்றி பெற நாமும் மனதார வாழ்த்தி விடை பெற்று அங்கிருந்து புறப்பட்டோம்.

நாகர்கோவில் அருகே கணவன் மற்றும் மாமியார் மீது வரதட்சணை புகார்!!

நாகர்கோவில் அருகே கணவன் மற்றும் மாமியார் மீது வரதட்சணை புகார்!!

நாகர்கோவில் அருகே மாதவலாயம் மைதீன்புரத்தைச் சேர்ந்த பாத்திமா ஷானியாவுக்கும் நபீலுக்கும் கடந்த 2024 ஏப்ரல் 15-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தனது பெற்றோர் வழங்கியதாகவும், அவை போதாது எனக் கூறி கணவரும் மாமியாரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் பாத்திமா ஷானியா நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும், அந்த புகாரில் கத்தாரில் கணவருடன் தங்கியிருந்தபோது தாக்குதல் மற்றும் விவாகரத்து மிரட்டலுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் ஜமாத் பேச்சுவார்த்தையின்பேரில் மாதவலாயத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்பச் செலவுக்குப் போதிய பணம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் 21-ந் தேதி காலை, ஊர் திரும்பிய கணவரைப் பார்க்க மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, இருவரும் சேர்ந்து தன்னைத் தாக்கி வெளியேற்றியதாகவும், பின்னர் விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி பதிவுத் தபால் அனுப்பி மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்துறையினர் அக்டோபர் 27-ந் தேதி, கணவர் நபீல் மற்றும் மாமியார் நபீஷத் பீவி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, அவதூறாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி!!

ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி!!

மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் 22 வயது மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.10 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியிலுள்ள சலாசர் பேருந்து நிலையத்தின் அருகே நிர்மல் மருந்தகம் உள்ளது. இந்த மருந்தகத்தில் சமீர் கான் என்பவர் மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்திற்கு பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி தனது அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினார். இதற்காக அவர் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலியை திறந்து வங்கிக் கணக்கு இருப்பை சோதித்து பார்த்தார்.

அப்போது வங்கிக் கணக்கு இருப்பை பூஜ்ஜியம் என காண்பித்தது. மேலும் அதில் ரூ.10 ஆயிரம் கோடி லைன் தொகை காண்பித்தது. இதனைக் கண்ட சமீர் கான் அதிர்ச்சியடைந்தார். வங்கி கணக்கில் அவருக்கு சொந்தமான ரூ.55 ஆயிரம் இருந்தது. அதனையும் அவரால் பயன்படுத்த முடியாத அளவுக்கு வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.

இதனால் சமீர் கான் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருந்தகம் உரிமையாளர் தீரஜ் சர்மாவிடம் கூறினார். இருவரும் சிகார் சைபர் கிரைமிற்கு சென்று சம்பவம் பற்றி தெரிவித்தனர். திடீரென்று சமீர் கான் அக்கவுண்ட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வந்துள்ளதும், தற்போது வங்கி கணக்கில் உள்ளமொத்த பணமும் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். சிகார் சைபர் கிரைம் காவல்துறையினர் அவர்களை வங்கிக்கு செல்லும்படி கூறினர். இருவரும் வங்கிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது வங்கி ஊழியர்கள் பிரச்சனையை சரி செய்தனர்.’தொழில்நுட்ப கோளாறு காரணமாக வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி காட்டியதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டது” என்று கூறி அந்த பிரச்சனையை சரி செய்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளைஞரை எலும்பை உடைச்சிருவேன் என கால்நடை மருத்துவ மிரட்டும் வீடியோ வைரல்!!

இளைஞரை எலும்பை உடைச்சிருவேன் என கால்நடை மருத்துவ மிரட்டும் வீடியோ வைரல்!!

பசு மாட்டிற்கு சிகிச்சை பெற வந்த இளைஞரை அரசு கால்நடை மருத்துவர் ஆபாசமாக திட்டி, “எலும்பை உடைத்து விடுவேன்” என மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு ஊராட்சி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதாசிவம். இவர் வீட்டில் வளர்த்து வரும் இரு பசு மாடுகளில் ஒன்றிற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மகன் சந்துரு பசு மாட்டை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் சங்கரநாராயணன் பசு மாட்டை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார்.

சிகிச்சை முடிந்ததும் நாளைக்கு எத்தனை மணிக்கு மாட்டை மறுபடியும் அழைத்து வர வேண்டும்? என்று சந்துரு மருத்துவரிடம் கேட்டுள்ளார். இந்த சாதாரண கேள்வியால் ஆத்திரமடைந்த மருத்துவர் சங்கரநாராயணன், 209 எலும்பையும் அடிச்சு உடைச்சிருவேன், உடம்பு மட்டும்தான் இருக்கும் தலை இருக்காது, அறுத்திருவேன் ராஸ்கல். உனக்கும் எனக்கும் 5 லட்சம் படி வித்தியாசம் நீ 5-ம் வகுப்பு நான் 50-ம் வகுப்பு படிச்சவன். என் படிப்பை படிக்க உனக்கு 2000 ஜென்மம் வேணும்.

10 IAS அதிகாரிகள் சப்போர்ட்ல தான் நான் இங்க இருக்கேன் என்று மிகக் கொச்சையான வார்த்தைகளால் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அப்போது, அங்கு தன் ஆட்டிற்கு சிகிச்சை பெற வந்த பெண் ஒருவரும் மருத்துவரின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். சந்துரு இச்சம்பவத்தை தன் செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்ட மருத்துவர், வீடியோ எடுக்கக் கூடாது என மீண்டும் மிரட்டியுள்ளார்.இந்த மிரட்டல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கனிமொழி ஓட்டுப்போடச் சொன்ன குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத துப்பற்ற ஆட்சி!!

கனிமொழி விமர்சனம்: ஓட்டுப்போடச் சொன்ன குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத துப்பற்ற ஆட்சி!!

விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொன்ன குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு துப்பற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் விஜய் என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் தவெக ஆட்சியில் அதிகரித்துள்ள சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

அப்போது, ”விஜய்க்கு வாக்களித்த பெண்களும் இளைஞர்களும், ‘தவறாக வாக்களித்துவிட்டோமே’ என வருத்தப்பட்டு வருகிறார்கள். இன்று பெண்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். நிச்சயம் மாற்றம் வரும்; விரைவிலேயே மாற்றம் வரும். ‘தெறி’ படத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டவனைப் பாலத்தில் கட்டித் தொங்கவிட்டுவிடுவார் விஜய். இதேபோல் விஜய் ஆட்சிக்கு வந்தால் ‘தெறிக்க விட்டுவிடுவார்’ என்று நம்பித்தான் ஆட்சிக்குக் கொண்டுவந்தனர். ஆனால், இன்று பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாலங்களுக்கு அடியில் கட்ட வேண்டும் என்றால், அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் கட்டி வைக்க வேண்டும்.

இரண்டரை வயதுக் குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை செய்யக்கூடியவர்களை எல்லாம் கட்சியில் நிர்வாகியாக வைத்திருக்கும் ஒரு மனிதாபிமானமற்ற கட்சி எதுவென்றால், அது தவெக.தான். “போதை இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவேன்” எனச் சொன்ன விஜய்யின் கட்சி நிர்வாகி வீட்டிலிருந்துதான் 135 கிலோ ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நினைத்தோம் பிளாக் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள் என்று. ஆனால், அவர்கள் வேறு எதையோ விற்றுக்கொண்டிருந்தார்கள்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 700 கொலைகள் ; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 400 சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதான் பாதுகாப்பை உருவாக்கக்கூடிய லட்சணமா? எதிர்க்கட்சிகளையும், திமுகவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, டீ வாங்கிக் கொடுத்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது காவல்துறை. இப்படித் தமிழ்நாடு முழுவதிலும் காவல்துறை பிசியாக இருக்கிறது. இதனால் சிறையிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வது அவர்களுக்குத் தெரியவில்லை. 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நண்பா, நம்பிஸ்… விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்க என்று சொன்னீர்களே… இன்று அந்தக் குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு துப்பற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் விஜய். குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படக்கூடிய தலைநகராகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. இந்த அளவிற்குத் தமிழ்நாடு இன்று மோசமாகியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீங்கள் மோதிரமெல்லாம் போட வேண்டாம். எங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நீங்கள் அண்ணன் சீர் எல்லாம் கொடுக்க வேண்டாம்; அதற்குப் பதில் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்” என கனிமொழி பேசினார்.

நயினார் நாகேந்திரன் கேள்வி திறனற்ற விஜய் சாமானிய மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறது..!

நயினார் நாகேந்திரன் கேள்வி: திறனற்ற விஜய் சாமானிய மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறது..!?

உலகப் புகழ்பெற்ற ஒரு புண்ணியத் தலத்தில், மிக முக்கியத் தலைவர்களின் வருகையின்போதே தடையில்லா மின்சாரத்தை வழங்கத் திறனற்ற திரு. ஜோசப் விஜய் அரசு, சாமானிய மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறது? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,” உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் மின்தடைச் சம்பவங்கள், திரு. விஜய் தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை முற்றிலும் செயலிழந்து, தமிழகத்தை இருண்ட காலத்திற்குத் தள்ளிவிட்டதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

நேற்று முன்தினம் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தபோது ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, நேற்று இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் மாண்புமிகு திரு. சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அடுத்தடுத்து இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது உச்சக்கட்டப் பாதுகாப்பு அவலமாகும்.

உலகப் புகழ்பெற்ற ஒரு புண்ணியத் தலத்தில், மிக முக்கியத் தலைவர்களின் வருகையின்போதே தடையில்லா மின்சாரத்தை வழங்கத் திறனற்ற திரு. ஜோசப் விஜய் அரசு, சாமானிய மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறது? தமிழ்நாடு மின்சாரத் துறை என்பதற்குப் பதிலாக ‘மின்தடை மற்றும் மெழுகுவர்த்தித் துறை’ என மாற்றிவிடலாம் என மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்குத்தான் தவெக அமைச்சர் திரு. சிடிஆர் நிர்மல்குமார் அவர்களின் லட்சணம் இருக்கிறது.

சமீபத்தில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் நிலவிய வெளிப்படைத்தன்மையற்ற போக்கு, கொள்முதல் குளறுபடிகள் மற்றும் நிர்வாகத் தோல்வியே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்தடை தலைவிரித்தாடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உடனடியாக அதிநவீன தானியங்கி ஜெனரேட்டர் (Automatic Power Backup) வசதிகளை அமைப்பதோடு, இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆன்மிகத் தலங்களின் கண்ணியத்தையும் தலைவர்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கியுள்ள தவெக அரசும், மின்துறை அமைச்சர் திரு. நிர்மல்குமாரும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.” என நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

India First