கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவரிடம் கிறிஸ்தவ வன்னியர் ஒருங்கிணைப்பு குழு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் மனு கொடுத்தனர். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-வது கட்ட பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல்லில் பல்வேறு சங்கங்களுடன் கலந்துறையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முத்தழகுபட்டி பங்குதந்தை அமலதாஸ் கிறிஸ்தவ வன்னியர்களை மீண்டும் MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல்வேறு சமுதாய, வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பேசினார்.
NGO காலனி சேசுராஜ் ஏற்பாட்டில் மேட்டுப்பட்டி பங்குதந்தை செல்வராஜ், குமரன் திருநகர் பங்குதந்தை ரூபேஷ் மற்றும் சமூக ஆர்வலர் திருப்பூர் அலோசியஸ், கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி, கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜஸ்டின் திரவியம், மேட்டுப்பட்டி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்று கொண்டு எடப்பாடி பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்வதாக கூறினார்.