செம்மண் திருடிய நான்கு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி பொதுமக்கள் சிறை பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மூலனூர் அடுத்த மூலக்கடை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நீரோடை வழிப்பாதையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தொடர்ந்து பல மாதக் கணக்கில் செம்மண் திருடி விற்பனை செய்து வந்த அருண்குமார் என்பவரின் நான்கு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி சிறை பிடித்து பொதுமக்கள் மூலனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.