September 26, 2026

செய்திகள்

திருமணம் ஆகாமல் 7 மாத கர்ப்பிணியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் கைது!!

திருமணம் ஆகாமல் 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணை அடித்து கொன்று காதலன் சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியுள்ள நிலையில் 8 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், கோணசமுத்திரம், கருங்குள்ளன் பகுதியை சேர்ந்த பேராகவுண்டர். இவரது மகள் கோகிலா கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி கோகிலா வயிற்று வலியால் அவதிப்பட்டதால், பெற்றோர் சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் கோகிலா 7 மாத கர்ப்பிணி என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் 21-ந் தேதி, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரில் அடிப்படையில் காவல்துறையினர் கோகிலாவிடம் நடத்திய விசாரணையில், கோணசமுத்திரம் அருகே கன்னியாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அம்மாசி, தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பல முறை உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமானதாக தெரிவித்தார். அம்மாசியை அழைத்து விசாரித்ததில் அவர் கோகிலாவை திருமணம் செய்வதாக எழுதி கொடுத்து உள்ளார்.

இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 26-ந் தேதி கோகிலா திடீரென காணாமல் போனதாக, அவரது பெற்றோரிடம் அம்மாசி கூறியுள்ளார். இது குறித்து புகாரின்படி கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று வெள்ளாளபுரம் கிராமம், பாச்சாலியூர் பகுதியில் குப்புசாமி என்பவரது விவசாய கிணற்றில் வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் மூட்டை ஒன்று மிதந்தது.

தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று சாக்குமூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது அதில் கோகிலா, அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து அம்மாசியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் கோகிலாவை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜூ விமர்சனம் முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா..!!

செல்லூர் ராஜூ விமர்சனம்: முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா..!!

ரீல்ஸ் ஆட்சி வேண்டாம். ரியல் ஆட்சிக்கு வாங்கடா என்றால் தவெக வரமாட்டேன் என்கிறார்கள். முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா சண்டாள பசங்களா? வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கு தமிழை வாசிக்க தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிகட்டு என பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மு.வி. கருப்பையா பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில்,”ஜென்சி தலைமுறை முதல்வர் எப்போது வந்தாரோ? அப்போது இருந்தே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தவெக ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி. படையப்பா படத்தில் செந்தில் காமெடி சீன் போல சட்டை என்னது மாப்பிள்ளை அவரு என்பது போல இருக்கிறது. மக்கள் பாராட்டுவதை போல புதிய திட்டங்களை முதல்வர் செய்துள்ளரா?

தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்த ஆட்சியாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஏதோ ஜாக்பாட் அடித்தது போல தவெக ஆட்சி அமைத்துள்ளது. மெர்சல் படத்தில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல நடித்த ஜென்சி தலைமுறை முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சை கண்டித்திருக்க வேண்டாமா. அலங்காநல்லூர் மக்கள் தான் சொல்ல வேண்டும். (மெர்சல் என்பதற்கு பதிலாக மெர்சி என்றார்.

ரீல்ஸ் ஆட்சி வேண்டாம். ரியல் ஆட்சிக்கு வாங்கடா என்றால் தவெக வரமாட்டேன் என்கிறார்கள். கீ கொடுத்தால் ஆடும் பாடும் முதலமைச்சராக உள்ளார். ஸ்கிரிப்ட் இருந்தால் தான் முதல்வர் பேசுகிறார். முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும்? ஸ்பாட்டில் அடித்து பேச வேண்டும். சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூட ஓரளவு சமாளித்து விடுவார். ஆனால் இவர் எல்லாவற்றிற்குமே அமைதியாக இருக்கிறார்.

முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா சண்டாள பசங்களா? வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கு தமிழை வாசிக்க தெரியவில்லை . ஓட்டே கேட்காமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டீர்களாடா ச*டாள*களா.. இதுவரை இவ* என்ன செஞ்சா* படத்தில் அப்படி என்ன கருத்து சொன்னா*. தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு எத்தனை குரல் கொடுத்திருக்கிறாய் நீ. ஏண்டா எம்ஜிஆர் மாதிரி நீ ஆயிர முடியுமா? ஒரு எம்ஜிஆர் தான் டா. நீ என் தலைவன் ஆகிற முடியுமா” என ஒருமையிலும் ஆவேசமாகவும் செல்லூர் ராஜூ பேசினார்..

ள, ல, ழ, ஷ எதுவுமே வராது.. பேரு மட்டும் தமிழக வெற்றிக்கழகம் முதலில் பெயரை மாற்றுங்க

ள, ல, ழ, ஷ எதுவுமே வராது.. பேரு மட்டும் தமிழக வெற்றிக்கழகம் முதலில் பெயரை மாற்றுங்க

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தமிழ் வார்த்தைகளை தடுமாறி வாசிப்பது, கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது குழப்பமடைவது என அடுத்தடுத்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், தமிழக பாஜக இப்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரின் கவனம் பெற்றுள்ளது.

தவெக ஆட்சி அமைந்தது முதலே, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் புதியவர்கள் என்பதால், போகப்போக அவர்களது செயல்பாடுகள் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளின் மூலம் அவர்களுக்கு தமிழே தகராறு என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தமிழ் வார்த்தைகளை வாசிப்பதிலும், உச்சரிப்பதிலும் அடுத்தடுத்து தடுமாறுவது, தற்போது அரசியல் விமர்சனத்துக்கும் ட்ரோல்களுக்கும் வழிவகுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலில், நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை வாசித்தபோதும், தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பிலும், எண்களை வாசிப்பதிலும் தடுமாற்றம் ஏற்பட்டது. முதல் நாள் இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஒரு திருக்குறளை கூட தவறாக படிக்கிறாரே? என்று ஆதங்கத்துடன் இணையத்தில் பதிவிட்டனர்.

அதேபோல சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தொடர்புடைய தகவலை தெரிவிப்பதற்குப் பதிலாக, வேறு ஒரு டேட்டாவை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பிறகுதான், உறுப்பினர் கேள்விக்கு பதிலளிப்பதில் சிரமப்பட்டதை அறிந்த பேரவைத் தலைவர், உறுப்பினரின் கோரிக்கையை குறிப்பெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தினார். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உச்சரிக்கவே திணறினார்.

தளபதியாரை வணங்கி என்பதற்கு பதில் “தளபிதியார்” எனவும் பேரவை தலைவர் என்பதற்கு பதில் பேரவர் தலைவர் எனவும் வடிவமைக்கப்பட்ட என்பதற்கு பதிலாக வடிக்கப்பட்ட எனவும் இல்லங்கள் என்பதற்கு பதிலாக இலக்கங்கள் எனவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, பேசியவை வீடியோவாக, சமூக வலைதளங்களில் பரவியது. குறிப்பாக, சில வார்த்தைகளின் உச்சரிப்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தை சபாநாயகரே குறுக்கிட்டு சரிசெய்த காட்சிகளும் பேசுபொருளாகியுள்ளன.

இதேபோல், அமைச்சர் கனிமொழி சந்தோஷ் முதல்முறையாக சட்டப்பேரவையில் உரையாற்றியபோது, தனக்கு பேச வாய்ப்பு வழங்கிய சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கையில், “மனமார்ந்த நன்றி” என்பதற்கு பதிலாக எதிர்பாராதவிதமாக “மன்மத நன்றி” என்றார். தனது வார்த்தைப் பிழையை உணர்ந்த அவர் சிரித்துவிட்டார். அந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், நேற்றைய முன்தினம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷும் அதே வார்த்தையை தவறுதலாக உச்சரித்து, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். இப்படி, தவெக அமைச்சர்களின் தமிழ் உச்சரிப்பு தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் கே. பாலசந்தரின் “தில்லுமுல்லு” திரைப்படக் காட்சியை பதிவிட்டுள்ளது.

அந்த சீனில் தேங்காய் சீனிவாசன், வேலைக்கு வருபவர்களின் பெயர்களை பார்த்தே அவர்களை பற்றி உயர்வாக நினைத்துவிட்டு, பின்னர் நேர்காணலின்போது அவர்களுக்கு “ள, ல, ழ, ஷ” போன்ற உச்சரிப்புகள் சரியாக வரவில்லை என்பதை தெரிந்து கொள்வார். இந்த காட்சியை தவெக அமைச்சர்களின் தமிழ் உச்சரிப்பு விமர்சனங்களுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ள பாஜக, “ள, ல, ழ, ஷ எதுவுமே வராது.. ஆனால் பேரு மட்டும் தமிழக வெற்றிக்கழகம்? முதலில் பெயரை மாற்றுங்க” என்ற தொனியில் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் கருத்துகள் தெரிவித்து வருகின்றன.

Supreme Cour Who authorized the Bar Council to punish law students National Law University

உச்ச நீதிமன்றம் அதிரடி: சட்ட மாணவர்களை பார் கவுன்சில் தண்டிக்க அதிகாரம் கொடுத்தது யார்..!?

சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கோ அல்லது மாநில பார் கவுன்சிலுக்கோ எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்ககழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமை விருந்தினராக பங்கேற்க இருந்ததை எதிர்த்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் பட்டம் பெற உள்ள சட்ட மாணவர்களுக்கான பதிவை நிறுத்திவைக்கவும், இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர் தனது உத்தரவை திரும்பப் பெற்றார். மேலும், தனது உத்தரவுக்காக மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கோரினார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவு பிறப்பிப்பதற்கு பிசிஐ-க்கு அதிகாரம் உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தி நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான மஹிரா சூட், அபிஷேக் திவாரி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர், உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், எந்த அதிகாரத்தின் கீழும் எந்த சட்ட விதியின் கீழும் பிசிஐ தலைவர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை ஆராய்வது அவசியம் என்று வாதிட்டார். தான் பிறப்பித்த உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாகவும், பிசிஐ கூட்டத்துக்குப் பிறகு அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவும் மனன் குமார் மிஸ்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில், ‘சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கோ அல்லது மாநில பார் கவுன்சிலுக்கோ எந்த அதிகாரமும் இல்லை. வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன் படி பிசிஐ-க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சட்ட பட்டதாரி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட பிறகு மட்டுமே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகார வரம்பு பிசிஐ-க்கு கிடைக்கிறது.

சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனம் அல்லது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தகுதியான அதிகாரி ஆகியோரிடம் மட்டுமே உள்ளது. மனன் குமார் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவுகள் எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமும் இன்றி பிறப்பிக்கப்பட்டவை’ என்று தெரிவித்தனர்.

சீமான் கேள்வி அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் என்றால்..! நிதிநிலை அறிக்கை எதற்கு

சீமான் கேள்வி: அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் என்றால்..!? நிதிநிலை அறிக்கை எதற்கு?

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் மக்களாட்சிக்கும், மக்களுக்கும் எதிரானதாகும். தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும். நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை – குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு?

சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால், அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா? மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை?

பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத் தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110-ஐ பயன்படுத்தினார்கள். அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?

சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா? முதல்வரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதல்வர் எதற்கு?

அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதல்வரின் மூளையில் உதித்தது என்பதையா?

கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?

நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கெனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?

மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேமலதா சிங்கப்பெண் படையில் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்!!

பிரேமலதா: சிங்கப்பெண் படையில் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்!!

தமிழக சட்டப்பேரவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கும் பணி அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரேமலதா பேசுகையில், “காவல் துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 9,129 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதுடன் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதல் காவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும். இதனால், அவர்களின் மன அழுத்தம் குறையும். அதன்மூலம் அவர்கள் சிறப்பாக பணியாற்றுவர். சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அதில் திருநங்கைகளுக்கும் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு வேலையும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.

ஊர்க்காவல் படையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. வாழ்க்கை செலவினங்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காவலர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவுப்படியை ரூ.300-லிருந்து ரூ.500 ஆகவும், மாதாந்திர இடர்படியை ரூ.1000-லிருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்” என பிரேமலதா தெரிவித்தார்.

ஏண்டா நீ எம்ஜிஆரா அவனுக்கு எதுக்கு ஓட்டு போட்டீங்க! முதல்வரை விமர்சனம் செய்த செல்லூர் ராஜு!!

ஏண்டா நீ எம்ஜிஆரா? அவனுக்கு எதுக்கு ஓட்டு போட்டீங்க! முதல்வரை விமர்சனம் செய்த செல்லூர் ராஜு!!

ஏண்டா எம்ஜிஆர் மாதிரி நீ ஆயிர முடியுமா? ஒரு எம்ஜிஆர் தான் டா. நீ என் தலைவன் ஆகிற முடியுமா” கீ’ கொடுத்தால் ஆடும் பாடும் முதலமைச்சராக உள்ளார் என ஒருமையிலும் ஆவேசமாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிகட்டு என பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மு.வி. கருப்பையா பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில், “ஜென்சி தலைமுறை முதல்வர் எப்போது வந்தாரோ? அப்போது இருந்தே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தவெக ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி. படையப்பா படத்தில் செந்தில் காமெடி சீன் போல சட்டை என்னது மாப்பிள்ளை அவரு என்பது போல இருக்கிறது. மக்கள் பாராட்டுவதை போல புதிய திட்டங்களை முதல்வர் செய்துள்ளரா?

தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்த ஆட்சியாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஏதோ ஜாக்பாட் அடித்தது போல தவெக ஆட்சி அமைத்துள்ளது. மெர்சல் படத்தில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல நடித்த ஜென்சி தலைமுறை முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சை கண்டித்திருக்க வேண்டாமா. அலங்காநல்லூர் மக்கள் தான் சொல்ல வேண்டும். (மெர்சல் என்பதற்கு பதிலாக மெர்சி என்றார்.

ரீல்ஸ் ஆட்சி வேண்டாம். ரியல் ஆட்சிக்கு வாங்கடா என்றால் தவெக வரமாட்டேன் என்கிறார்கள். கீ கொடுத்தால் ஆடும் பாடும் முதலமைச்சராக உள்ளார். ஸ்கிரிப்ட் இருந்தால் தான் முதல்வர் பேசுகிறார். முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும்? ஸ்பாட்டில் அடித்து பேச வேண்டும். சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூட ஓரளவு சமாளித்து விடுவார். ஆனால் இவர் எல்லாவற்றிற்குமே அமைதியாக இருக்கிறார்.

முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா சண்டாள பசங்களா பசங்களா? வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கு தமிழை வாசிக்க தெரியவில்லை . ஓட்டே கேட்காமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டீர்களாடா ச*டாள*களா.. இதுவரை இவ* என்ன செஞ்சா* படத்தில் அப்படி என்ன கருத்து சொன்னா*. தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு எத்தனை குரல் கொடுத்திருக்கிறாய் நீ. ஏண்டா எம்ஜிஆர் மாதிரி நீ ஆயிர முடியுமா? ஒரு எம்ஜிஆர் தான் டா. நீ என் தலைவன் ஆகிற முடியுமா” என ஒருமையிலும் ஆவேசமாகவும் செல்லூர் ராஜூ பேசினார்..

Bronwen James, a 30-year-old physical education teacher, arrested in England for having sexual relations with a 16-year-old student!!

16 வயது மாணவருடன் உடலுறவு கொண்ட 30 வயது உடற்கல்வி ஆசிரியை கைது!!

இங்கிலாந்தில் பள்ளி படிக்கும் மாணவருடன் உடலுறவு கொண்டதாக 30 வயது உடற்கல்வி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டனில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த 30 வயது பிரோன்வென் ஜேம்ஸ் 16 வயது மாணவருடன் உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆசிரியை கைது செய்யப்பட்டு வழக்கு இப்போது நடந்து வருகிறது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரோன்வென் ஜேம்ஸ் மறுத்துள்ளார். அங்குள்ள வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர், “மாணவர் முதலில் பிரோன்வென் ஜேம்ஸை ஸ்னாப் சாட்டில் நட்பு பட்டியலில் சேர்க்க முயன்றுள்ளார். ஆனால், அதை பிரோன்வென் ஜேம்ஸ் நிராகரித்துள்ளார். பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று கொண்டு இருக்கிறார்.

இதையடுத்து இருவரும் மெசேஜ் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். முதலில் அந்த மெசேஜ்கள் எல்லாம் நார்மலாகவே தொடங்கியுள்ளது. பிறகு காதலாக மலர்ந்த அது, பாலியல் ரீதியான மெசேஜ்களாகவும் மாறியுள்ளது. பின்னர் இருவரும் காரில் முத்தமிட்டு கொண்டனர்” என்றார். மற்றொரு சந்தர்ப்பத்தில், டென்னிஸ் போட்டியை டிவியில் போட்டுவிட்டு, இருவரும் முத்தமிட்டு கொண்டு, பாலியல் உறவில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், பாலியல் உறவு மூலம் அந்த மாணவரை பிரோன்வென் ஜேம்ஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மாணவரை காதலிப்பதாகவும், இருவரும் சேர்ந்து வேறு இடத்துக்கு சென்றுவிடலாம் என்றெல்லாம் கூறியதாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாணவரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இந்த உறவு தனக்கு நல்லது போல இருந்ததாகவும் தனது விருப்பத்திற்கு உட்பட்டே எல்லாம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், கொஞ்ச காலத்திற்கு பிறகே தான் திட்டமிட்டு இந்த உறவுக்குள் இழுக்கப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பிரோன்வென் ஜேம்ஸ் சவுத்தாம்ப்டனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டது உட்பட மொத்தம் 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரோன்வென் ஜேம்ஸ் மறுத்துள்ளார். நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைய கலைஞர் உதயநிதி எங்களை ஓடக் கூடாதுனு சொல்லிட்டு!! இப்ப முதல்வரே வேகமாக ஓடுறாரே!!

இளைய கலைஞர் உதயநிதி: எங்களை ஓடக் கூடாதுனு சொல்லிட்டு!! இப்ப முதல்வரே வேகமாக ஓடுறாரே!!

வரும் திங்கள்கிழமை நாங்கள் எழுந்து ஓடக் கூடாது என சொல்லிவிட்டு முதல்வர் விஜய்யே ஓடுகிறாரே “3 நாட்கள் அவைக்கு விடுமுறை. நன்கு தயார் செய்து கொண்டு வரும் திங்கள்கிழமை தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இளைய கலைஞர் உதயநிதி கிண்டல் செய்தார்.

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் இளைய கலைஞர் உதயநிதி கடந்த 116 நாட்களில் தவெக அரசில் நடந்த கொலை, கொள்ளை, ஆணவக் கொலை, பாலியல் குற்றங்களை பட்டியலிட்டார்.

அதேபோல தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்தார். மேலும் “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறிவிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை எதற்காக இந்த ஆட்சியில் காவல்துறையின் தலைமை இயக்குநராக நியமித்தீர்கள், அது போல் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அமல்ராஜை ஏன் சென்னை ஆணையராக்கினீர்கள். நாங்கள் நியமித்த அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதால்தானே அவர்களுக்கு புரமோஷன் கொடுத்தீர்கள் என இளைய கலைஞர் கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்வர் விஜய், “அனைத்து எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும். ஆனால் நான் பதிலளிக்கும் போது யாரும் எந்திரிச்சு ஓட கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும்” என கூறிவிட்டு விஜய் அவையை விட்டு வெளியே சென்றுவிட்டார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எங்களை வெளியே ஓடக் கூடாது என கூறிவிட்டு தற்போது அவரே வேகமாக வெளியே ஓடிவிட்டாரே” என தெரிவித்தார்.

மேலும் இளைய கலைஞர், “3 நாட்கள் அவைக்கு விடுமுறை. எனவே 3 நாட்கள் நன்கு தயார் செய்து கொண்டு வரட்டும். வரும் திங்கள்கிழமை அன்று எந்த திசை திருப்பலும் தேவையில்லாத குட்டி கதைகளும் இல்லாமல் முதல்வர் பதில் சொல்லட்டும்” என இளைய கலைஞர் உதயநிதி தெரிவித்தார்.

தண்ணீரில் ஜாதி தோடும் புதுப்பட்டி கிராமம்!! நாமக்கல் மாவட்டத்தில் தொடரும் அவலங்கள்!!

தண்ணீரில் ஜாதியை தேடும் புதுப்பட்டி!! நாமக்கல் மாவட்டத்தில் தொடரும் அவலங்கள்!!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூர் புதுப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின சமுதாயத்தை சார்ந்த அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் மூன்று மேல்நிலை தொட்டிகள் இருக்கின்றன. இந்த மூன்று மேல்நிலை தொட்டிகளில் இரண்டு மாற்று சமுதாயத்தைச் சார்ந்த பகுதிகளில் இருக்கிறது. மற்றொன்று பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய பகுதியில் இருக்கிறது. இந்த மூன்று மேல்நிலைத் தொட்டிகளுக்கும் மாற்று சமுதாயத்தைச் சார்ந்தவர் ஒருவரே மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றும் வேலையை செய்து வருகிறார்.

மாற்று சமுதாயம் வாழ்ந்து வரக்கூடிய பகுதியில் தொடர்ந்து குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தண்ணீர் அப்பகுதி மேல்நிலைத் தொட்டிகளுக்கு முறையாக தண்ணீர் ஏற்றி வருகிறார் என்றும், பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய மேல்நிலைத் தொட்டிக்கு முறையாக தண்ணீர் ஏற்றுவது இல்லை.

அப்படியே ஏற்றினாலும் தண்ணீர் திறந்து விடக் கூடிய கேட் வாலை பாதி அளவிற்கு மட்டுமே திறந்து தண்ணீர் குறைப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் பட்டியலின மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு முறையாக தண்ணீர் என்பது மேல்நிலைத் தொட்டிக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை சம்பந்தமாக பலமுறை உள்ளாட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட புதுப்பட்டி பட்டியலின மக்கள் அனைவரும் காலி குடத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். காலி குடத்துடன் போராட்டம் நடத்திய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு நாளை முதல் முறையாக தண்ணீர் வரும் என்று உறுதி அளித்தனர்.

புதுச்சத்திரம் ஒன்றிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுக்க மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி முறையாக தண்ணீர் வருவது போல அதிகாரிகள் கண் முன்பு ஒரு வகையான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதைப் பார்த்து பொதுமக்களும் சரி இனிமேல் தண்ணீர் வரும் என்று நம்பி இருந்தார்கள். ஆனால் இன்று காலை மீண்டும் பழையபடி தண்ணீர் வராமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அதைத்தொடர்ந்து புதுப்பட்டி பட்டியலின சமுதாய மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகினர்.

அப்போது, மாற்று சமூகத்தில் இருக்கக்கூடிய மேல்நிலைத் தொட்டிகளில் ஒன்று புதிதாக கட்டப்பட்டது. அந்த மேல்நிலை தொட்டியில் இருந்து புதிதாக இணைப்பை கொடுப்பதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரி பைப்புகளை இணைக்கும் பணியை ஆரம்பித்தபோது மாற்று சமுதாய மக்கள் நீங்கள் புதிதாக ஒரு லைனை தேர்வு செய்து பைப் எல்லாம் போட வேண்டாம் நீங்கள் போடுவதாக இருந்தால் பழைய பைப்போடு இணைத்து விடுங்கள் இல்லையென்றால் நாங்கள் போட விட மாட்டோம் என தெரிவித்துள்ளனர். பைப் லைன் இணைக்க வந்த ஊழியர்கள் அதை கைவிட்டுள்ளனர். ஆகையால் அந்த பணியை நாளை முடித்து தருகிறேன் என வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவாதம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

India First