இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலர் கைது கைது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் நாகம்மாள் பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சம்பத் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2023 -ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக சம்பத் உள்ளிட்ட சிறப்பு படை காவலர்கள் திருநெல்வேலிக்கு சென்றனர். அப்போது சம்பத்துக்கும், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய திருநெல்வேலியை சேர்ந்த 28 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து இருவருக்கும் பழக்கம் அதிகரித்தது. செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு இருவரும் அடிக்கடி பேசி வந்தனர்.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக வெளியே சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பத் மீண்டும் உளுந்தூர்பேட்டைக்கு பணிக்கு மாற்றப்பட்டார். அங்கு பணி செய்து வந்த போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பத் கடந்த 2024 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண்ணை கடலூருக்கு அழைத்ததின் பேரில் இளம்பெண்ணும் கடலூர் வந்து இருக்கிறார். அப்போது இருவரும் ஒரு விடுதியில் ஒன்றாக 4 நாட்கள் தங்கியதாகவும், அப்போது ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சில நாட்கள் கழித்து திருமணம் தொடர்பான பேச்சை இளம்பெண் எடுத்துள்ளார். அப்போது இது தொடர்பாக அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. மேலும் சம்பத் இளம்பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்றும், கெட்ட வார்த்தையில் திட்டி போனை வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தஇளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலர் கைது செய்யப்பட்ட அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.