தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் பெண் சிகிச்சை உதவியாளர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், தென்காசி மாவட்ட த்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊரக நலத்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஆயுஷ் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பிரிவுகளில் 2 ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் 1 பெண் சிகிச்சை உதவியாளர் காலிப்பணியிடங்களில் பணியாளர்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் (Ess ential Qualification and Experienc e:Diploma in Nursing Therapeutic Course (for Certificates issued by Govt. of Tamil Nadu only) மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice-c ategory/recruitment//-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.07.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), தென்காசி-627811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.