வாய் தகறாரில் இளைஞருக்கு 16 வெட்டுகளுடன் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்றுவரும் நிலையில் CCTV புட்டேஜ்கள் கைப்பற்றி சரவணம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி சுண்ணாம்பு கால்வாய் SNS கல்லூரி பகுதியில் கார் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றை ஹேம்நாத் என்பவர் நடத்தி வருகின்றார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் இருவர் அருகில் உள்ள கடைக்கு உணவு வாங்குவதற்காக சென்று உள்ளனர். அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சனையில் அதீத போதையில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அவர்களை தாக்க ஆரம்பித்தனர்.

அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு கடையின் உரிமையாளர் இந்த சம்பவத்தை பார்க்க ஹேம்நாத்திடம் போய் தெரிவிக்க நண்பர்கள் காப்பாற்று நோக்கத்துடன் அங்கிருந்து வந்த ஹேம்நாத் மற்றும் நண்பர் பிரசன்னாவை வெறி கொண்ட இந்த கும்பல் சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் பிரசன்னா சிறிய காயம் ஏற்பட்ட ஹேம்நாத் வெட்டு காயங்களுடன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். வெட்டுக்காயங்களுடன் உயிர்க்கு ஆபத்தான நிலையில் சிதைந்து கிடந்த ஹேம்நாத்தை அருகில் இருந்த அவருடைய சகோதரர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தெரியபடுத்தி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரிந்து வந்து ம்பவ இடத்தில் இருந்த CCTV புட்டேஜ்கள் எடுத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விசாரணையில் சரவணம்பட்டி காவல்துறை நான்கு பெயரை கைது செய்து நடத்தி வருவதாக தகவல் தெரிய வருகின்றது. மேலும் ஏதேனும் முன் பகை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா என்று கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.