ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதல் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவிகள் மற்றும் பள்ளி பணியாளர்களுக்காக பெரும்திரளான இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர், ஈரானும் பிராந்தியத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதனால் மேற்கு ஆசியப் பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் வினாப் பகுதியில் அமெரிக்க ராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் இணைந்து கோரத் தாக்குதலை நடத்தின. இதில் பள்ளி ஒன்றின் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்து சிதறியதில் அங்கு படித்து வந்த 165 மாணவிகளும் பள்ளியின் ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்களும் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மினாப் நகரின் பொதுத் திடலில் தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆண்கள் இஸ்லாமிய குடியரசு கொடியை ஏந்தியும், பெண்கள் கருப்பு உடை அணிந்து துயரத்தில் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய ஒரு பெண், தன்னை “அடேனா” என்ற மாணவியின் தாயாக அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மகளின் படத்துடன் “இது அமெரிக்க குற்றங்களின் சான்று” என்று கூறினார். அவரது உரைக்கு பின்னர் கூட்டத்தில் இருந்தோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.