பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்திலுள்ள லிமெய்ராவில் உள்ள ‘பான்டே டோ எஸ்கெலட்டோ’ சாகச சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமல் பாலத்து ஊஞ்சலில் (Bridge swing) இருந்து வீசப்பட்ட பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
21 வயதான மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ஃப்ரீடாஸ் பெண்ணின் பாதுகாப்பு கவசத்தில் (Harness) பாதுகாப்பு கயிற்றை இணைக்க ஊழியர்கள் மறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் 40 மீட்டர் உயரமுள்ள பாலத்திலிருந்து வீசப்பட்டு உயிரிழந்த கொடூரமான விபத்து கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தைச் சார்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.