விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் பேக்கிங் லைசன்ஸ் வழங்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி என்பவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி அடுத்த பூசாரெட்டிபட்டியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் அதே பகுதியில் ஓரு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 9-ந் தேதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி அவர்கள் சங்கரநாராயணன் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் செய்யப்பட்ட பருப்பு பாக்கெட்டுகளில் விலை மற்றும் தேதி குறிப்பிடப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பேக்கிங் லைசன்ஸ் இல்லாமல் இருப்பதாக கூறி அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு 5 ஆயிரம் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அந்த அபராத தொகையை சங்கரநாராயணன் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் சங்கரநாராயணன் அவர்கள் பேக்கிங் லைசன்ஸ் பெறுவது எப்படி தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி அவர்களிடம் விசாரிக்க பேக்கிங் லைசன்ஸ் பெற 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சங்கரநாராயணன் அவர்கள் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்திக்கு பாடம் புகட்ட நினைத்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சங்கரநாராயணனிடம் கொடுத்து அனுப்ப தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தியிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் ஜாஸ்மின் முன்தாஜ் தலைமையிலான ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தியை பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.