ஏற்றம் இறைத்தல், கமலை ஏற்றம் என்றிருந்த நம் விவசாயிகள் காலம் மாற மாற கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறுக்கு இப்போது மாறிவிட்டார்கள். இன்று கிணறுகளில் இருந்து நீர் இறைக்க நிச்சயம் மின்சாரம் வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு இலவச மின்சார திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40,000 சர்வீஸ்கள் வழங்கி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் அரசின் அறிவிப்பைப் பொறுத்து இந்த விவசாய இணைப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் வைத்திருக்க வேண்டும். 50 சென்ட் நிலம் இல்லாத பட்சத்தில் மூன்று – நான்கு பேர் இணைந்துகூட இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இப்படி ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்தில் அனைவரது கையொப்பமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பதாரர் நில உரிமை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டா அவசியம் வேண்டும். அந்தப் பகுதியில் 50 சென்ட் நிலம் தொடர்ச்சியாக இல்லாத பட்சத்தில் விண்ணப்பத்துடன் தடையில்லா சான்றிதழ் அல்லது ரூட் பெர்மிட் சமர்ப்பிக்க வேண்டும்.

விவசாய இலவச மின் இணைப்பு திட்டத்துக்கு விண்ணபிக்க https://www.tangedco.org என்ற இந்த லிங்கை க்ளிக் செய்து, விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்யுங்கள். இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.200 + 18% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். தொடர்ச்சியாக ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வுக்குப் பிறகு, விண்ணப்பம் பதிவு செய்யப்படும். இதன் பின்னர் விண்ணப்பதாரருக்கு பதிவு எண் மற்றும் பதிவு தேதி கொடுக்கப்படும்.
விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட செயற் பொறியாளரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் T.இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் இவரது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
தாட்கோ மூலம் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது அவருக்கு மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால் மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக பணிபுரிந்து வரும் பார்த்திபன் அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, உதவி மின்பொறியாளர் பார்த்திபன் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் விவசாயி மாரியப்பன் உதவி மின்பொறியாளர் பார்த்திபன் அவர்களிடம் பேச 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத விவசாயி மாரியப்பன் மருங்காபுரி உதவி மின்பொறியாளர் பார்த்திபனுக்கு பாடம் புகட்ட நினைத்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாரியப்பனிடம் கொடுத்து அனுப்ப தொழிலாளர் உதவி மின்பொறியாளர் பார்த்திபனிடம் வழங்கினாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாக உதவி மின்பொறியாளர் பார்த்திபனை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.