நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்த கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களாகவே தெருநாய் விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் கோபிநாத் நடத்தும் நீயா, நானா நிகழ்ச்சியில் தெருநாய் விவகாரம் குறித்து விவாதம் நடந்தது. அதன்பின் தெருநாய்களுக்கு ஆதரவாக பேச வந்தவர்களை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்ய தொடங்கினர். இதற்காக துணை நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்டோர் விளக்கமும் அளித்தனர். இதனிடையே, திருவண்ணாமலையில் தெருநாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கலின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அப்போது, தெருநாய்கள் பிரச்சினை குறித்த கேள்விக்கு, “இதற்கான தீர்வு மிகவும் சிம்பிள். உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் கழுதைகள் எங்கே என்று கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்து இருக்கிறது? ஆனால் இப்போது கழுதைகளையே காணவில்லை. அதை யாராவது காப்பாற்றவேண்டும் என்று பேசினார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்” என கமல்ஹாசன் தெரிவித்தார்.