தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலக சிங்க தினம் ஆகஸ்ட் 10 – ஆம் தேதி ஆண்டுதோறும் \கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில், உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு சிங்கங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
இதையடுத்து எல்.கே.சுதீஷ் கூறுகையில், தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள். அப்போது, ஜெயலலிதாவையும் பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசினேன். அம்மையார் ஜெயலிலதா இருக்கும் போது புரட்சித்தலைவி என்றும் சிங்கப்பெண், லயன் லேடி என்று கூறுவார்கள். இன்றைக்கு அதே இடத்தில் என்னுடைய சகோதரியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிங்கப் பெண்ணாக இருக்கிறார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவராக இருக்கிறார் என்றால் அது பிரேமலதா தான். அதனால் தான் ஒப்பிட்டு பேசுகிறேன். பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தேமுதிக நேற்றைய தினம் சிங்கத் தினம் (லயன் டே) என்பார்கள். அந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவையும், பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசியதாக தெரிவித்தார்.