கோயம்புத்தூர் மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னிமடை ஊராட்சி . கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பு என்ற பெயரில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற பின், மனைவி ஊராட்சி தலைவி என்றாலும் , கணவர் மருதாசலம் பேச்சை கேட்டு திமுகவை விட்டு விலகி விட்டதாக கூறினர். ஆனால் கட்சி தான் (திமுக) இவர்களை நீக்கியதாம். ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றவுடன், தனது கணவர் மருதாசலம் சொல்படி, தலைவி ரத்தினம் மருதாசலம் ரியல் எஸ்டேட் மற்றும், பஞ்சாயத்துக்குட்பட்ட தொழில் அதிபர்களிடம் மெகா டீலிங்கில் இறங்கி விட்டாரம்.
இதற்கு வலது கரம் போல் குமார் என்கிற சிவக்குமார் (மன்ற உறுப்பினர்) செயல்பட்டாராம். இது இப்படி இருக்க தற்போது ‘பஞ்சாயத்தில் ஒரு பஞ்சாயத்து ” என்பது போல் 10 -வது வார்டில் தண்ணீர் திறந்துவிடும் அம்சான் என்பவர் மீது குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. அதாவது தண்ணீர் திறந்து விட “சிறப்பாக ” கவனிப்பவர்களுக்கு “சிறப்பாக சப்ளை செய்யப்படுகிறதாம். மேலும் வீடுகளை குடிநீர் குழாய் இணைப்புக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிகமாக கட்டாய வசூல் செய்கிறார்களாம். சோக் பிட் அமைக்க 5000 முதல் 7000 வரை கேட்கிறார்களாம்.
இது குறித்து பன்னீர் மடை ஊராட்சி செயலர் சதீஷிடம் கேட்ட போது, அப்படி ஒரு குற்றச்சாட்டும் இதுவரை வரவில்லை. எனினும் தவறு நடக்கிறதா என்று விசாரிக்கிறேன் என்று முடித்துக் கொண்டார். இது குறித்து குமார் என்கிற சிவக்குமாரிடம் கேட்டபோது, ஆமாம் மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்றும், மேலும் தற்போது தண்ணீர் திறக்க நியமிக்கப்பட்டுள்ள நபருக்கு பஞ்சாயத்தில் பதிவேடு இல்லை, மேலும் அவரது மகன்கள் இருவர் பேரில் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மகன்கள் இருவரும் திருப்பூரில் வேறு வேலை செய்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் புகார் கூற பயப்படுகின்றனர். எனவே இதை பஞ்சாயத்து நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடித்துக் கொண்டார்.
இது பற்றி 10 -வது பொதுமக்களிடம் விசாரித்த போது குமார் கூறுவது போல் இங்கு எந்த குற்றச்சாட்டும் இருந்தது போல் தெரியவில்லை என்றனர். மேலும் சிலர் கூறும்போது தண்ணீர் திறந்துவிடும் ஆம்சன் குமாருக்கு உறவினராம். அதாவது ஊராட்சி மன்ற பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், பதவியில் இருக்கும் போது எப்படி ஆட்டி வித்தாரோ, அதே போலவே தற்போதும் குமார் வேலை வாங்குவதும் தொடர்கதையாக இருக்கிறதாம். இவருக்கு முன்னால் தண்ணீர் திறந்து விட்டு கொண்டிருந்த கணேசன் இறந்து விட்ட நிலையில், ஆம்சன் அந்த வேலை பார்க்க தொடங்கியதும் குமார் நினைத்த காரியம் எதுவும் நடக்கவில்லை. அதனால் காழ்ப்புணர்ச்சியில் குற்றம் சாட்டுகிறார் என்று கூறுகிறார்கள். இது போன்ற சலசலப்புகளை கடந்து விட்டு மக்களுக்கான பணிகளை பார்த்தாலே “பஞ்சாயத்தில் ஓர் பஞ்சாயத்து வராது.