T-20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக வென்று புதிய சாதனை படைத்து மட்டுமில்லாமல் சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற முதல் அணி, தொடர்ந்து 3-வது முறை T-20 உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது.
2026-ஆம் ஆண்டு T-20 உலகக் கோப்பை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த தொடர் முழுவதுமே தடுமாறி வந்த அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலில் இருந்தே சிக்சர், பவுண்டரி என பட்டையை கிளப்பி நியூசிலாந்து பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.

குறிப்பாக அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்து அசத்தினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் பொறுப்பும் அதிரடியும் கலந்து ரன்களை சேர்த்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது. இதன் விளைவு இந்திய அணி 7.1 ஓவர்களில் 98 ரன்களை கடந்தபோது அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இசான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சனுடன் இணைய அபிஷேக் ஷர்மா காட்டிய அதிரடியை இசான் கிஷன் காட்ட தொடங்க இந்திய அணியின் ரன் ரேட் உயர்த்து கொண்டே இருக்க 15 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது.
இந்திய அணி 15.1 ஓவர்களில் 203 ரன்களை கடந்தபோது சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 5-வது பந்தில் இசான் கிஷன் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 54 ரன்களிலும் கடைசி பந்தில் சூரியகுமார் யாதவ் ரன் ஏதுமில்லாமலாமல் ல் ஆட்டமிழக்க சாம்சன், இசான் கிசான், சூரியகுமார் யாதவ் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தது ஆட்டத்தில் சிறிய சரிவை ஏற்படுத்தியது.

அதன் பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் சிவம் துபே 2 சிக்ஸர், 3 பவுண்டரி என 24 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவிக்க T-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதனால் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை கு நிர்ணயித்தனர.
மேலும் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இதே மைதானத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ரசிகர்களை அமைதிப்படுத்துவோம் என்று கூறி, அதனைச் செய்து காட்டியது போலவே அதே பாணியில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், அகமதாபாத் மைதானத்தில் திரளும் ஒரு லட்சம் இந்திய ரசிகர்களையும் தங்கள் ஆட்டத்தின் மூலம் அமைதிப்படுத்துவோம் என்று சவால் விடுத்த நிலையில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

நியூசிலாந்து அணி 2.4 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசிய, ஃபின் ஆலன் 7 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 9 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்து வெளியேற நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது.
இதேபோன்று ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணியின் அதிரடி நாயகனான கிளன் பிலிப்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரனான டிம் சீஃபர்ட் மட்டும் அதிரடி காட்டினார். இதனால் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 52 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைப் போன்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 8.1 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து நிலையில் டிம் சீஃபர்ட் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 52 ரன்கள் சேர்த்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேற நியூசிலாந்து அணி நோக்கி சென்றது.

இந்த கட்டத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு டாரல் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஜோடி சேர்ந்து கௌரவமான தோல்வியை தழுவ வேண்டும் என்று நோக்கில் அதிரடி காட்ட முயன்றனர். ஆனால், டாரல் மிட்செல் 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 17 அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆட்டம் இழக்க ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியான நிலையில் கீழ் வரிசை வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 1 விக்கெட்டுகளையும் விக்கெட்டு கைப்பற்ற நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பைனலில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. டி20 உலககோப்பை வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இதுவாகும். கோப்பையை வென்ற உடன், கேப்டன் சூரியகுமார் உள்ளிட்ட வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2026 -ஆம் அண்டு T-20 உலகக் கோப்பை தொடங்கும் போது, சொந்த மண்ணில் உலக கோப்பையை ஒரு நாடு வென்றது இல்லை, தொடர்ந்து 2-வது முறை ஒரு அணி T-20 உலகக் கோப்பையை வென்றது இல்லை மற்றும் ஒரு அணி 3-வது முறை T-20 உலகக் கோப்பையை வென்றது இல்லை என்ற வரலாற்று நிகழ்வுகளுடன் “ஹிஸ்டரி ரிப்பீட் பண்ணுவோம், ஹிஸ்டரி டிஃபீட் பண்ணுவோம்” என்ற நம்பிக்கை முழக்கத்துடன் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹிஸ்டரி ரிப்பீட் மற்றும் ஹிஸ்டரி டிஃபீட் செய்த ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது.