“வொர்த்தே இல்லையா?” Because women is another EARTH. எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே என பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை போல ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும், ஆண்களின் வெற்றிக்கும் வித்தாக அமைவது பெண்ணின் தன்னலமற்ற தியாகமே. சமையல் அறை முதல் விண்வெளி வரை சாதனை படைக்கும் பெண்களைக் கௌரவிக்கவே இந்தத் தினம்.
1909 -ஆம் ஆண்டு பிப்ரவரி 28 -ந் தேதி நியூயார்க் நகரில் அமெரிக்க சோசலிசக் கட்சி ” மகளிர் தினத்தை ” முதன்முதலில் அறிவித்தாலும் ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கைக் கௌரவிக்கும் வகையில் 1917 விளாடிமிர் லெனின் 1922 -ஆம் ஆண்டு மார்ச் 8 -ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்த பின்னர் சோசலிச இயக்கம் மற்றும் கம்யூனிச நாடுகளால் அந்த நாளில் கொண்டாடப்பட்டது . இதனை தொடர்ந்து 1977-ஆம் ஆண்டு மார்ச் 8 -ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய விஜய், முதல் முறையாக விவாகரத்து விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்தார். விஜய் பேசும்போது, “சமீபத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் போராடி ஹர்ட் ஆக வேண்டாம். நீங்கள் ஹர்ட் ஆவது எனக்கு ஹர்ட் ஆகிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல.. நீங்க மக்களுக்காக போராடுங்க. நானும் நீங்களும் சேர்ந்து மக்களின் பிரச்சனைகளை பார்ப்போம், அதில் வருத்தம் எல்லாம் கிடையாது” எனப் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில், It’s WORTH ! Worth & worth! Because women is another EARTH. பூமியை நாம் பூமாதேவி என்றே அழைக்கிறோம். சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே, சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ ! Happy WOMEN’S DAY ! என பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.