மனைவியின் சொந்த குடும்ப உறுப்பினர்களான தந்தையும், சகோதரரும் சேர்ந்து கணவனை அடித்து துப்பாக்கியால் சுட்டதில் அவரால் சுயமாக எழுந்து நடமாட கூட முடியவில்லை.ஆகையால், Cr.P.C. பிரிவு 125 இன் கீழ் பராமரிப்பு கோர முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இரண்டு மனங்கள் இணைந்த திருமணம் வரதட்சணை என்கிற பெயரில் நடக்கும் கொடுமைகள் இந்த உறவை லாப-நஷ்ட வியாபாரமாக மாறிவிட்டது.
இதன் விளைவு, திருமண முறிவு சமீப காலமாக அதிகரித்து வரும் சூழலில், இந்த முறிவை காரணம் காட்டி பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் ஆண்கள் புலம்புகின்றனர். இப்படிபட்ட வழக்கு ஒன்றில் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு கவனம் பெற்றிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் அருகே வேத் பிரகாஷ் சிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு வினிதா என்பவருடன் திருமணம் நடந்து இல்லற வாழ்க்கை இனிக்க தொடங்கியது. ஆனால், வழக்கமாக வரும் பொருளாதார பிரச்சனைகள் இவரது குடும்பத்திலும் சூறாவளியை கிளப்ப.. 2019-ல் நிலைமை தலைக்கீழாய் மாறியது.
குடும்ப சண்டையில், வினிதாவின் தந்தையும், சகோதரரும் சேர்ந்து பிரகாஷை போட்டு அடி வெளுத்து இருக்கின்றனர். இந்த தாக்குதலின்போது பிரகாஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில்.. அவருடைய முதுகு தண்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரால் சுயமாக எழுந்து நடமாட கூட முடியவில்லை. அவரது வேலையும் போய்விட்டது. இந்த சூழலிலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், ஹோமியோபதி மருத்துவரான வேத் பிரகாஷ் சிங்கின் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவி என்று கூறிக் கொண்ட வினிதா தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவை உள்ளடக்கியது. அவர் பிரிவு 125 Cr.P.C இன் கீழ் அவரிடமிருந்து இடைக்கால பராமரிப்பு கோரினார்.
இந்த வழக்கை நீதிபதி லட்சுமி காந்த் சுக்லா தலைமையிலான விசாரணை கொண்டது. அப்போது, கணவர் வருமானம் ஈட்ட முடியாமல் போனதற்கு காரணம் மனவைியின் குடும்பத்தினர் நடத்திய தாக்குதல்தான். ஒருவரை செயல்படாமல் ஆக்கிவிட்டு.. அவரிடமே பணம் கேட்பது என்பது அர்த்தமற்றது. கணவரின் வருமான ஆதாரத்தையும், சொத்துக்களையும் ஏற்கெனவே குடும்பத்தினர் முடக்கி வைத்து இருக்கின்றனர்.
மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் பின்வரும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி: 1978 -ஆம் ஆண்டு கேப்டன் ரமேஷ் சந்தர் கௌஷல் எதிரான வீணா கௌஷல் வழக்கில், சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு உண்மையான சமூகப் பொருத்தத்தை வழங்க அரசியலமைப்பு ரீதியாக பச்சாதாபத்துடன் விளக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. 1997-ஆம் ஆண்டு ஜஸ்பீர் கவுர் சேகல் எதிரான மாவட்ட நீதிபதி வழக்கில், பராமரிப்புத் தொகையை நிர்ணயிப்பதற்கு எந்த நிலையான சூத்திரத்தையும் வகுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
2015 -ஆம் ஆண்டு ஷாஹித் கான் எதிரான ஷமிமா ஃபரூக்கி வழக்கில், ஒரு கணவரின் பராமரிப்புச் செலவு அவரது உண்மையான சம்பாதிக்கும் திறனைப் பொறுத்தது, அதாவது அவர் சம்பாதிக்க முடியாவிட்டால், அவரை பராமரிப்புச் செலவு செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது போன்ற வழக்கு தீர்ப்புகளை சுட்டி காட்டி, ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, இரு தரப்பினரின் நிலை, அவர்களின் தேவைகள் மற்றும் கணவரின் பணம் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தொகை நியாயமானதாகவும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
எனவே கணவரிடமிருந்து ஜீவனாசம் பெற்றுத்தவரை உத்தரவிட முடியாது. அவரை எங்களால் கட்டாயப்படுத்த முடியாது. பல வழக்குகளில். கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் எப்படியாவது சம்பாதித்து மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்து இருக்கின்றன. ஆனால், இந்த வழக்கில்.. கணவரின் வருமானம் இழப்புக்கு காரணமே மனைவிதான். எனவே ஜீவனாம்சம் கொடுக்க கட்டாயப்படுத்த முடியாது. இது மட்டுமல்லாது வினிதா நன்கு படித்தவர். சுயமாக வருமானம் ஈட்டக்கூடியவர் என்று தீர்ப்பு வழங்கியது.