காதலனை கொன்று சூட்கேஸில் அடைத்து மலையில் இருந்து கீழே போட்ட பெண்ணிற்கும் கள்ளக்காதலின் கணவன் மற்றும் 3 குழந்தைகளை கொன்றவருக்கும் சிறையில் பூத்த காதல், நீதிமன்ற அனுமதியுடன் திருமணமாக இந்தியாவில் அரிதான சம்பவம் . ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாடலிங் செய்து வந்த பிரியா சேத் என்கின்ற நேகா சேத் என்பவர் திக்ஷந்த் கம்ரா என்ற இளைஞரை காதலித்து வந்தார். ஆனால் காதலன் நிறைய கடனில் சிக்கி தவித்து வந்தார்.
இந்த நேரத்தில்தான் நேகாவுக்கு டேட்டிங் ஆப் மூலம், துஷ்யந்த் சர்மா என்பவர் கடந்த 2018-ல் பழக்கமானார். அப்போது, புதிய காதலனை கடத்தி பணத்தை பறித்து, அதன்மூலம் பழைய காதலனின் கடனை அடைக்க நேகா திட்டமிட்டார். இதற்காக சம்பவத்தன்று துஷ்யந்த் சர்மாவை, தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து 3 லட்சம் பணம் வாங்கி உள்ளார். பிறகு காதலன் திக்ஷந்த் கம்ராவுடன் சேர்ந்து அங்கேயே துஷ்யந்த் சர்மாவை நேகா கொலை செய்தார்.

மேலும் யாரிடமும் மாட்டி கொள்ளகூடாது என்பதற்காக, துஷ்யந்த் ஷர்மாவின் முகத்தில் ஏராளமான கத்திக்குத்து காயங்களையும் ஏற்படுத்தி பிறகு இருவரும் சேர்ந்து துஷ்யந்த் ஷர்மாவின் சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து மலையில் இருந்து கீழே போட்டுவிட்டனர். எனினும் சூட்கேஸில் இருந்த சடலம் நேகாவை காட்டி தந்துவிட்டது. இறுதியில் நேகா உட்பட 3 பேரை கைது செய்யப்பட்ட நிலையில் நேகா ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட சம்பவம் 8 வருடங்களுக்கு முன்பு, அன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
மற்றொரு புறம் ஆல்வார் நகரை சேர்ந்த ஹனுமன் பிரசாத் என்பவர் சந்தோஷி என்ற விளையாட்டு வீராங்கனையை காதலித்து வந்தார். ஹனுமானை விட சந்தோஷிற்கு 10 வயது அதிகம். அதுமட்டுமல்ல, சந்தோஷிற்கு திருமணமாகி 3 குழந்தைகளும் இருந்தன. எனினும் சந்தோஷ் சந்தோஷி – ஹனுமன் பிரசாத் கள்ளக்காதல் வளர துவங்கியதால், கணவனை கொன்றுவிட்டார்கள். ஆனால் சந்தோஷியின் 3 பிள்ளைகளும் இதை பார்த்துவிட்டனர். உடனே தன்னுடைய 3 குழந்தைகளையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சந்தோஷி கொன்றார்.

இதையடுத்து, இவர்களுக்கும் ஜெயில் தண்டனை தரப்பட்டது. அதாவது மேற்கண்ட இரு வேறு, வேறு சம்பவங்களிலும் நேகா, ஹனுமன் பிரசாத் இருவருமே 2023-ல் ஆயுள் தண்டனையை பெற்றனர். இதையடுத்து இவர்கள் 2 பேருமே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு, திறந்த வெளியில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, நேகாவிற்கு ஹனுமன் பிரசாத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் சிறையில் வெளியில் வேலை செய்தனர். அப்போது இந்த காதல் வலுவானது. இந்த காதல் நீதிமன்ற வளாகத்திலும் தொடர்ந்துள்ளது. இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள சிறை அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்தனர்.

மேலும் திருமணத்துக்காக பரோல் வேண்டி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அல்வாரில் உள்ள பரோடாமேவில் திருமணம் செய்து கொள்ள நீதி மன்றம் 15 நாள் பரோல் வழங்கியது. அதன்படி நேகா மற்றும் ஹனுமன் பிரசாத் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் இனிதே நடந்துள்ளது. சிறையில் பூத்த காதல், நீதிமன்ற அனுமதியுடன் திருமணமாக மாறியிருப்பது இந்தியாவில் அரிதான விஷயம் ஆகும்.