திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் போன்ற பணிகளை உதவி நிர்வாக பொறியாளர் தலைமையில் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததார் முருகன். மாநகராட்சி பகுதிகளில் செய்த பணிகளுக்கு பில் தொகை விடுவிக்ககோரி 3-வது மண்டல பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனிடம் விண்ணப்பித்தார். அதற்கு இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் ரூ.8.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், முதல் கட்டமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஒப்பந்ததார் முருகன், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனு க்கு பாடம் புகட்ட நினைத்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை ஒப்பந்ததார் முருகன் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை, கையும் களவுமாக பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.