கர்நாடகாவின் ஷிவமொக்காவில் உள்ள விஷால் மார்ட் கட்டிடத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில், இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்தூக்கி திடீரென நின்றதால், அதில் இருந்த ஒன்பது பேரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
விஷால் மார்ட் மால் ஊழியர்கள் பலமுறை முயன்றும் மின்தூக்கி கதவுகள் திறக்காததால் பீதி பரவியது. உடனடியாக வெளியேற வழியில்லாததால், உள்ளே சிக்கியிருந்தவர்களில் ஒருவர் இறுதியில் 112 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி மின்தூக்கி கதவுகளை திறந்து உள்ளே சிக்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே கொண்டுவரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.