ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை 8.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலுள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோ மீட்டர் ஆழத்தில் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பலரும் பயந்து அலறி அடித்து வீடுகளை விட்டு தெருக்களில் ஓடினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.