இந்திய அரசியல் வரலாற்றில் பிரசாரம் அடிப்படையில் கரூரில் ரசிகர்களை காவு வாங்கியுள்ள சோக நிகழ்வுகளை ஒரு கரும்புள்ளியாகும். கோயம்பேடு ரோகிணி தியேட்டர் இருக்கைகள் அனைத்தையும் விஜய் ரசிகர்கள் நாசம் செய்தபோது… ரசிகர்களை முறைப்படுத்தாமலும்.. அதை கண்டிக்காமல்… அமைதி காத்து வேடிக்கை பார்த்து ததன் பலன்.. அரசியல் கட்சி ஆரம்பித்து ரசிககளை அரசியலுக்கு மடைமாற்றம் செய்து இன்று 41 உயிர்களை விஜய் காவு வாங்கியுள்ளார்.
தவெக தலைவர் ஓரிடத்தில் பிரசாரம் செய்கிறார் என்றால், அங்கு அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்ம்கள் மற்றும் வீட்டின் கூரைகள் என ஏறி அமர்வது. கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என அரசும், காவல்துறையும், ஏன் தவெக தலைவரும் கூறிய பிறகும் கூட, பலர் குழந்தைகளை கூட்டத்திற்கு விஜய்யை பார்ப்பதற்கு அழைத்து சென்று ஒரு சிலருக்கு அவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டதும். கூட்டம் முடிந்தவுடன் அந்த இடம் அலங்கோலமாக மாறியிருப்பதும் ஒரு வேதனையான விஷயமாகும்.
கூட்டம் அதிகமாக இருக்கிறது முன்னே செல்லாதீர்கள்னு காவல்துறை தடுக்க அதைக் கேட்காமல் அவர்கள் திட்டமிட்ட இடத்துக்கு பேருந்தைக் கொண்டுவந்து நெரிசலை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இது போக பக்கவாட்டில் இரண்டு ஆம்புலன்ஸ் (டெம்போ டிராவலர் தவெக கொடியுடன்) அவர்களே கூட்டி வந்தது.
ஆனால், 30 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் வகையில் மெதுவாக விஜய் கடந்து கூட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரச்சார வாகனம் வந்தபிறகும் விஜய் மேலே ஏறி வருவதற்கு முழுதாக 9 நிமிடம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் விஜய் தனது முகத்தை காட்டி கையை அசைத்திருந்தால் அங்கிருந்த கூட்டங்கள் எல்லாம் கலைந்திருக்கும். ஆனால் விஜய்யோ அப்படி செய்யாமல் அந்த கூட்டத்தை அப்படியே கூடவே அழைத்து வந்திருக்கிறார்.
கரூர் துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் 3 நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
விஜய் ஒவ்வொரு கூட்டத்தையும் முடித்துவிட்டு திரும்பிச் செல்லும்போது மட்டும் எப்படி விரைவாகச் செல்கிறார்? விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினம்பாக்கம் இல்லத்துக்குச் செல்கிறார். அப்போது ஏன் கூட்டம் இல்லை? இந்நிலையில், திமுக மீது பழிபோட்டு விஜய் தப்பிக்க நினைக்கிறார். காவல்துறை கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம் என 5 மணிக்கே எச்சரித்தும் வம்படியாக உள்ளே சென்றது ஏன்? 5 மணிக்கு பிறகு உங்களை பார்க்க கூடிய கூட்டத்தை பார்க்காமல் பேருந்துக்குள் சென்றது ஏன்? உங்கள் தவறுகளை எல்லாம் மறைத்துவிட்டு 3 நாள் கழித்து வீடியோ போட்டு இருக்கிறார்கள்.
நெடுஞ்சாலை முழுக்க எதிர் திசையில பயணம் செஞ்சு தவெகவினர் போக்குவரத்து நெரிசல் உருவாக்கி இருக்கின்றார்கள். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் சினிமா பாணியில் விஜய் பேசும் வீடியோ . 41 குடும்பங்களின் ஓலம் விஜயின் கல்நெஞ்சை கரைக்கவில்லை. பனையூரில் இருந்தவாறு மீண்டும் ஓரு ஷூட்டிங்கை விஜய் நடத்தியிருக்கிறார்.
டிசம்பர் மாசம் போக வேண்டிய கரூர் மாவட்டத்துக்கு, ஏன் இவளோ சிக்கிரம் வரணும்..?? விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தையொட்டி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு தவெக பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், செப்டம்பர் 13-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13-ந் தேதி- திருச்சி, பெரம்பலூர், அரியலூர், செப்டம்பர் 20-ந் தேதி- நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, செப்டம்பர் 27-ந் தேதி- திருவள்ளூர், வட சென்னை, அக்டோபர் 4 மற்றும் 5-ந் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, அக்டோபர் 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெய்வேலி, தூத்துக்குடி, அக்டோபர் 18-ந் ஆம் தேதி காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, அக்டோபர் 25-ந் தேதி தென் சென்னை, செங்கல்பட்டு.
நவம்பர் 1-ந் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நவம்பர் 8-ந் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நவம்பர் 15-ந் தேதி தென்காசி, விருதுநகர், நவம்பர் 22-ந் தேதி கடலூர், நவம்பர் 29 -ந் தேதி சிவகங்கை, ராமநாதபுரம், டிசம்பர் 6 -ந் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, டிசம்பர் 13-ந் தேதி சேலம், நாமக்கல், கரூர், டிசம்பர் 20-ந் தேதி திண்டுக்கல், தேனி மதுரை.
திருவள்ளூர், வட சென்னை போக வேண்டிய விஜய் ஏன் திடீரென்று நாமக்கல் மற்றும் கரூர் என்று தன் சனிக்கிழமை சுற்றுலாவை மாற்றினார் ? செந்தில் பாலாஜி தான் இவர்கள் டார்கெட்டா ? மக்கள் மயங்கி விழுந்தனர் என்று தெரிந்தும் ஏன் பேச்சை தொடர்ந்தார் ? 72 மணி நேரம் ஏன் பதுங்கி இருந்த விஜய் ஏன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விடுகுறார் ? இது மூலமாக தன் ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி வன்முறையை தூண்ட ஏன் முயற்சிக்கிறார் ?
தவெக தலைவர் ஓரிடத்தில் பிரசாரம் செய்கிறார் என்றால், அங்கு அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்ம்கள் மற்றும் வீட்டின் கூரைகள் என ஏறி அமர்வது. கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என அரசும், காவல்துறையும், ஏன் தவெக தலைவரும் கூறிய பிறகும் கூட, பலர் குழந்தைகளை கூட்டத்திற்கு விஜய்யை பார்ப்பதற்கு அழைத்து சென்று ஒரு சிலருக்கு அவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டதும். கூட்டம் முடிந்தவுடன் அந்த இடம் அலங்கோலமாக மாறியிருப்பதும் ஒரு வேதனையான விஷயமாகும்.
விஜய் ரசிகர்கள் மக்கள் மத்தியில் மாஸ் காட்டுகின்றோம் என்று நினைத்துக்கொண்டு செல்லும் இடங்களில் எல்லாம் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமே விஜய் ரசிகர்களின் தலையாய பணியாக இருந்தது. நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பேச வேண்டிய விஜய், சென்னையில் இருந்து காலை 8.45 மணிக்கு தான் திருச்சிக்கு புறப்படுகிறார். நாமக்கல் பிரசார கூட்டத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு 6 மணிநேரம் கால தாமதமாக போய் சேர்கிறார்.
கொங்கு மண்டலம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டி திமுகவிற்கு தூணாக இருக்கும் செந்தில் பாலாஜியை வீழ்த்த தவெகவினர் திட்டமிட்டு திருவள்ளூர், வட சென்னை போக வேண்டிய விஜய் திடீரென்று நாமக்கல் மற்றும் கரூர் என்று தன் சனிக்கிழமை சுற்றுலாவை மாற்றி ரசிகர்கள் மனதில் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்ய வைத்து. அதிகப்படியான கூட்டத்தை கூட்டி 41 அப்பாவி ரசிகர்களை பழிவாங்கிவிட்டு திமுகவை நேர்வழியில் வீழ்த்த முடியாது என்று தெரிந்து கொள்கை எதிரியுடன் ரகசிய கூட்டணியமைத்து அரசியல் எதிரியை வீழ்த்த ரசிகர்கள் பிணத்தில் அரசியல் செய்யும் விஜய்யின் செயல் மிகவும் வேதனை அளிக்கிறது.