கரூர் உயிரிழப்புகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் காரணம் என்றால் அக்கட்சியை தடை செய்யுங்கள். விஜய்யை கைது செய்யுங்கள் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முன்னாள் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்கள் V. செந்தில்பாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பல கட்சிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நின்றனர். வந்தன. இதற்கு முன்பு இந்திய அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றதில்லை என்கிற அளவுக்கு இந்த மரணம் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
ஆனால், விஜய் பேச்சை முடிக்கும் முன்பே ஒவ்வொருவராக கூட்டத்தில் கீழே மயக்கமுற்று விழ துவங்கிவிட்டார்கள். மக்கள் மயங்கி விழுவதை கண்டு அவர்களை மீட்பதற்கு விஜய் எந்த நடவடிக்கையும் மோற்கொள்ளவில்லை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டதை அறிந்து விஜய் மக்களை பற்றி கவலை படாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். பாதிக்கப்படட மக்களை சந்திக்காமல் தவெக தலைவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக பிரசாரம் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பாருங்கள் விஜய். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை கலைத்துவிடுங்கள். கள்ளச்சாராய மரணத்தின் போது முதல்வர் நேரில் செல்லவில்லை. கரூர் உயிரிழப்புகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் காரணம் என்றால் அக்கட்சியை தடை செய்யுங்கள். விஜய்யை கைது செய்யுங்கள் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.