விஜய்யை கைது செய்ய வேண்டும், நடந்த சம்பவத்துக்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் வந்த கமெண்ட்களை எல்லாம் தொகுத்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்த ஓவியா, அவைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுவிட்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் 110 க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் அறிந்தவுடன் முன்னாள் திமுக மற்றும் அதிமுக அமைச்சர்கள் V. செந்தில்பாலாஜி, எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பல கட்சிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நின்றனர். இதற்கு முன்பு இந்திய அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றதில்லை என்கிற அளவுக்கு இந்த மரணம் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
ஆனால், விஜய் பேச்சை முடிக்கும் முன்பே ஒவ்வொருவராக கூட்டத்தில் கீழே மயக்கமுற்று விழ துவங்கிவிட்டார்கள். மக்கள் மயங்கி விழுவதை கண்டு அவர்களை மீட்பதற்கு விஜய் எந்த நடவடிக்கையும் மோற்கொள்ளவில்லை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டதை அறிந்து விஜய் மக்களை பற்றி கவலை படாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். பாதிக்கப்படட மக்களை சந்திக்காமல் தவெக தலைவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இந்நிலையில், கரூர் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டார். இந்த பதிவானது இணையத்தில் வேகமாக பரவியது. அதாவது, விஜய்யை கைது செய்ய வேண்டும், நடந்த சம்பவத்துக்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் வந்த கமெண்ட்களை எல்லாம் தொகுத்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்த ஓவியா, அவைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுவிட்டார்.. மேலும், தன்னுடைய போட்டோவை ஷேர் செய்து, “நீ விரும்பும் பெண்ணாக இரு” என்று கேப்ஷனையும் தந்திருந்தார்.
இது விஜய் ரசிகர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோசமாகவும், நாகரீகமற்ற வார்த்தைகளாலும், கொச்சையான பதிவுகளில் ஓவியாவை திட்ட துவங்கிவிட்டனர். ஓவியாவை கைது செய்ய வேண்டும், ஓவியாவை இன்ஸ்டாவில் யாரும் பின்தொடர வேண்டாம், பெறப்பட்ட PAYTM தொகை ரூபாய் ரூ. 200, தவெகவினர் அனைவரும் சேர்ந்து ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ரிப்போர்ட் அடிக்க வேண்டும் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, நீ குடிச்சிட்டு காரை ஏற்றி பல பேரை கொலை செய்ய பாத்தியே உன்னை ஏன் கைது செய்யகூடாது? இதுக்கு முன்னாடி கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்தபோது, நீ ஏதாவது பேசினாயா? முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்” என்பது உள்பட ஓவியாவுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் மற்றொருபுறம் இந்த பதிவை பலரும் வரவேற்று, ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. இரும்பு பெண் என்பதை ஓவியா மீண்டும் நிரூபித்துவிட்டார்.. ரொம்பவும் தைரியமான பெண், உங்களை ஒரு பெண் எதிர்த்து கேள்வி கேட்டால், உடனே அந்த பெண்ணை ஆபாசமாக பேசுவதும் நடத்தையை விமர்சிப்பதும் தான் உங்களது புத்தி… இதுதான் விஜய் கட்சியின் லட்சணம் விஜய் நிர்வாகிகள் லட்சணம்? இவர்கள் எப்படி தமிழ்நாட்டை வழி நடத்துவார்கள்? என்றெல்லாம் ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறார்கள்.