சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத் சாயை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஏராளமான பெண்கள் ட்பஷீராபாத் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் பண்டி சஞ்சயின் மகன் பகீரத் சாய் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, பெட்பஷீராபாத் காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலங்கானா, செகந்திராபாத், பஷீராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட மொய்னாபாத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் அவளது பெற்றோரும் பெட்பஷீராபாத் காவல் நிலையத்தில் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத் சாய் மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த புகாரில், பகீரத் சாய் தன்னை மது அருந்தும்படி கட்டாயப்படுத்தியதாகவும், தனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று ஏராளமான பெண்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
பகீரத் சாயை உடனடியாகக் கைது செய்து, இந்த வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று அவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .