தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை தவெகவிற்கு கிடைக்கவில்லை. ஆகையால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று இரண்டாக மாறயுள்ளது. முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளிக்க முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பதவிப்பிரமாணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜயுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசலுக்கே வந்து, விஜய்யை கட்டி அணைத்து சிரித்த முகத்துடன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் ஜோசப் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்’காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75′ புத்தகத்தை பரிசாக கொடுத்தார். இந்த சந்திப்பின் போது உதயநிதி முதலமைச்சர் விஜயின் அருகிலேயே அமர்ந்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி இருக்கும் நிலையில் பலரும் ஸ்டாலின், உதயநிதியின் பண்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.